வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் குறித்து பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மஸில் ரகத்தை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் வெகு பிரபலமானது. மிரட்டலான தொனியுடன் கூடிய சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் செடான் கார்கள் இந்த ரகத்தில் குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு மஸில் கார் தயாரிப்பில் நெடிய பாரம்பரிம் மிக்கது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்கர்களை பொறுத்தவரையில், அங்கு விலை குறைவான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களாக மஸில் கார்கள் குறிப்பிடப்படுகின்றன.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

அமெரிக்காவில் மட்டுமே கிடைத்து வந்த ஃபோர்டு மஸ்டாங் கார் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், வலது பக்க டிரைவிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

இந்த நிலையில், புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்த ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் எஸ்யூவி ரக பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் மேகஸின் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால், வடிவத்தில் பிரம்மாண்டமாக மாற இருக்கிறது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

அமெரிக்காவில் பிரபலமான எஸ்யூவி மாடல்களாக வலம் வரும் ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் மற்றும் லிங்கன் ஏவியேட்டர் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட சிடி6 என்ற கட்டமைப்பின் கீழ்தான் புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மாடல் எஸ்-650 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

கடந்த 2014ம் ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார்தான் தற்போது விற்பனையில் உள்ளது. இந்த மாடலானது 4,784 மிமீ நீளமும், 1,916 மிமீ அகலமும், 1,381 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. வீல் பேஸ் 2,720 மிமீ ஆக உள்ளது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

ஆனால், புதிய தலைமுறை மாடல் சிடி6 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், வடிவத்தில் பெரிய காராக மாறுகிறது. மேலும், 5,050 மிமீ நீளமும், 2,000 மிமீ அகலமும் கொண்டதாக இருக்கும். வடிவமைப்பிலும் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாற இருக்கிறது.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய யூனிபாடி மற்றும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். ஆனால், டிசைனில் வேறுபடும்.

வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் முதல்முறையாக ஹைப்ரிட் எரிநுட்பம் கொண்டதாகவும் வர இருக்கிறது. பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்படும் புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் டாட்ஜ் சேலஞ்சர் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2019, 18:05 [IST]
English summary
The Ford Mustang is all set to get a whole lot bigger when the Blue Oval brand brings out the next-generation of the pony car. According to a new report by Automobile Magazine, the next-generation Ford Mustang will be based on the CD6 platform that underpins the brand's Explorer SUV along with the Lincoln Aviator.
மேலும்... #ஃபோர்டு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+