மாருதி சியாஸ் கொடுத்த அடி... புதிய சிட்டி காரை களமிறக்கும் ஹோண்டா!
புதிய ஹோண்டா சிட்டி காரின் டிசைன் மிக அட்டகாசமான முறையில் கவரும் வகையில் மாற்றப்பட இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட நவீன அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
மாருதி சியாஸ் கார் கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, புதிய சிட்டி காரை களமிறக்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிதான் இந்தியாவின் நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது. ஆனால், மாருதி சியாஸ் கார் வந்த பிறகு, இந்த நிலை படிப்படியாக மாறத் துவங்கியது.

தற்போது மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ் கார்தான் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. அண்மையில் புதிய மாருதி சியாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும், ஹோண்டா சிட்டி காருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மிகச் சிறப்பான அம்சங்களுடன் புதிய சிட்டி காரை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் டிசைன் மிக அட்டகாசமான முறையில் கவரும் வகையில் மாற்றப்பட இருக்கிறது. அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட நவீன அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

அதேநேரத்தில், தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படும். எனினும், மாருதி சியாஸ் கார் போன்றே, மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் சேர்க்கப்பட இருக்கிறது.

மேலும், பெட்ரோல் மாடலின் பவரை வெளிப்படுத்தும் திறன் அதிகப்படுத்தப்பட இருக்கிறது. டீசல் எஞ்சின் திறனில் மாற்றம் இருக்காது. இதனால், குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்ல மாடலாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

மற்றுமொரு தகவலின்படி, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் வடிவமும் பெரிதாக்கப்பட இருப்பதால் உட்புறத்தில் இடவசதி மேம்படும். குறிப்பாக, கால் வைப்பதற்கான லெக்ரூம் இடவசதி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சியாஸ் காருக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் விதத்தில் டிசைன், செயல்திறன் மற்றும் வசதிகளில் சிறப்பான மாடலாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது புதிய ஹோண்டா சிட்டி கார். இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








