கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

சென்னையில் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டின் ராஜாவாக ஹூண்டாய் க்ரெட்டா வலம் வருகிறது. சொகுசு கார்கள் போன்ற தோற்றம், சிறந்த எஞ்சின் தேர்வுகள், வசதிகள் மற்றும் சரியான விலை உள்ளிட்ட காரணங்களால், பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் ஆதரவை தக்க வைக்கும் விதத்தில், பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்ட முற்றிலும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், சென்னையில் வைத்து புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், இந்த கார் கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

ஸ்பை படங்களில் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர், ரூஃப் ரெயில்கள், சைடு மிரர்கள், 5 ஸ்போக் அலாய் வீல்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வருகிறது. இந்த காரின் டிசைன் முற்றிலும் புதிதாக மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

புதிய க்ரில் அமைப்பு, எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், பம்பர் அமைப்பு ஆகியவை இடம்பெற இருக்கின்றன. மொத்தத்தில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் டிசைன் முற்றிலும் புதிதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் 5 சீட்டர் மட்டுமின்றி, 7 சீட்டர் மாடலிலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இது க்ரெட்டா பிரியர்கள் மற்றும் எஸ்யூவி வாங்க காத்திருப்போர் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி உள்ளது.

கிண்டியில் முக்காடு போடு சுற்றிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா - ஸ்பை படங்கள்!

அண்மையில் விற்பனைக்கு வந்த கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின்கள் அனைத்தும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2019, 18:37 [IST]
English summary
The new generation Hyundai Creta SUV car has been caught road testing in Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+