புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ மூலமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி7எக்ஸ் கட்டமைப்பு கொள்கையின் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது புதிய டிஃபென்டர். அலுமினியம் மோனோகாக் சேஸீயில்தான் புதிய டிஃபென்டர் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட இந்த சேஸீ மூன்று மடங்கு அதிக உறுதித்தன்மையையும், இலகுவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி 90 மற்றும் 110 என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், 90 மாடலானது 6 சீட்டர் மாடலாகவும், 110 மாடலில் 7 பேர் செல்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கும்போது 1,075 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியையும், இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால் 2,380 லிட்டர் பூட்ரூம் இடவசதியையும் பெற முடியும்.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி சிறந்த ஆஃப்ரோடு மாடல் என்பது தெரிந்த விஷயம்தான். புதிய தலைமுறை மாடலானது 900 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடந்து செல்லும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

இந்த கார் 3,720 கிலோ எடையுடைய ட்ரெயிலரை இழுத்துச் செல்லும் திறனையும் பெற்றிருக்கிறது.இதன் கூரையில் மட்டும் 300 கிலோ எடையை தாங்கும் வலிமையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியானது 291 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதனால், எந்தவொரு சாலைகளையும் அனாயசமாக கடந்து செல்லும். ஏற்ற, இறக்கமான சாலைகளிலும் வெகு எளிதாக முன்னேறுவதற்கும், இறங்குவதற்குமான வடிவமைப்பு சிறப்புகளை இந்த கார் பெற்றுள்ளது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியானது இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின்கள் என 4 விதமான தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பிளக் இன் ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

இந்த ஆஃப்ரோடு எஸ்யூவியில் நிரந்தரமான ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், எந்நேரமும் இயங்கு நிலையில் உள்ள ரியர் லாக்கிங் டிஃபரென்ஷியல் இருப்பது் இதனை முழுமையான ஆஃப்ரோடு மாடலாக பரைசாற்றுகிறது. இந்த காரில் டெர்ரெயின் 2 ரெஸ்பான்ஸ் சிஸ்டம் என்ற ஆஃப்ரோடு தொழில்நுட்பமும் உள்ளது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் இனன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. நேரடியாக இதன் சாஃப்ட்வேரை அப்டேட் செய்்யும் வசதியையும் வழங்குகிறது. அதேநேரத்தில், சாதாரண வகை ஏசி கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளது.

புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியானது ஸ்டான்டர்டு, இ, எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அத்துடன், எக்ஸ்ப்ளோரர், அட்வென்ச்சர், கன்ட்ரி மற்றும் அர்பன் பேக் ஆகிய நான்குவிதமான ஆக்சஸெரீ பேக்கேஜ்களுடன் வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2019, 11:40 [IST]
English summary
Land Rover has unveiled the new gen Defender SUV in 2019 Frankfurt motor show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+