வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து சென்று விட்டாலும், இன்று வரை விஜய் மல்லையா விவகாரம் விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் அவர் வாங்கிய கடன் கொஞ்ச நஞ்சமல்ல. 9 ஆயிரம் கோடிகளுக்கும் மேல்.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

விஜய் மல்லையா வழியில் நாட்டில் அடுத்த பரபரப்பை கிளப்பியவர் நீரவ் மோடி. விஜய் மல்லையா ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தலை தூக்கிய நீரவ் மோடி விவகாரம் நாட்டையே உலுக்கி எடுத்தது. பஞ்சாப் தேசிய வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 13,500 கோடி ரூபாய் கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தவில்லை என்பதுதான் நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டு. இந்த விவகாரம் தொடர்பாக நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீரவ் மோடி வசம் இருந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ஷே பனமெரா, மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், டொயோட்டா பார்ச்சூனர், டொயோட்டா இன்னோவா, ஹோண்டா சிஆர்-வி உள்பட பல்வேறு விலை உயர்ந்த லக்ஸரி கார்கள் நீரவ் மோடியின் கேரேஜில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

இந்த சூழலில் நீரவ் மோடியின் கார்களை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தத்தை, எம்எஸ்டிசி எனப்படும் மெட்டல் ஸ்க்ராப் ட்ரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு (Metal Scrap Trade Corporation Limited -MSTC) அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. இதன்பேரில் நீரவ் மோடி வசம் இருந்த கார்களை ஏலம் விடுவதற்கான பணிகளை எம்எஸ்டிசி நிறுவனம் செய்து வருகிறது.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

இதனிடையே தனது வெப்சைட்டில் ஆன்லைன் ஏலம் ஒன்றை எம்எஸ்டிசி நிறுவனம் நடத்துகிறது. இதில், நீரவ் மோடியின் சொகுசு கார்கள் ஏலம் விடப்படவுள்ளன. இந்த ஆன்லைன் ஏலம் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. முறைப்படி உரிய கணக்கு வைத்துள்ள யார் வேண்டுமானாலும், அனைத்து வாகனங்களுக்கும் ஏலம் கோர முடியும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து வாகனங்களும் ஆன்லைன் ஏலம் மூலமாகவே விற்பனை செய்யப்படவுள்ளன.

வைர வியாபாரி நீரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆன்லைன் மூலம் ஏலம்! எப்போது தெரியுமா?

முன்னதாக சமீபத்தில் நீரவ் மோடிக்கு சொந்தமான 68 கலைப்பொருட்கள் வருமான வரித்துறை மூலம் மும்பையில் ஏலம் விடப்பட்டன. அவை 59.37 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. தங்கள் சார்பாக இந்த ஏலத்தை நடத்துவதற்கான சப்ரான் ஆர்ட் என்ற நிறுவனத்தை வருமான வரித்துறை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: news18

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2019, 13:11 [IST]
English summary
Nirav Modi’s Luxury Cars Including Rolls Royce Ghost To Be Auctioned Online On April 18. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+