இந்தியாவில் இருந்து விற்பனையாகாமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், 8,000 டட்சன் கார்களையும் 65,000 நிஸான் சன்னி கார்களையும் அடுத்த 14 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. டட்சன் கார்களையும் 65,000 நிஸான் சன்னி (ஆர்என்ஏஐபிஎல்) என்கிற நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

இதுகுறித்து ஆர்என்ஏஐபிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிஜு பாலேந்திரன் கூறுகையில், நிஸான் நிறுவனம் டட்சன் கோ சிவிடி மற்றும் கோ+ சிவிடி மாடல்களை அடுத்த மாதம் டிசம்பரில் இருந்தே ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்த ஏற்றுமதி டட்சன் நிறுவனத்தின் சார்பாக இருக்காது என்றார்.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

இதுமட்டுமல்லாமல், நிஸான் நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமான டட்சன் ரெடி கோ மாடல் கார்களையும் 2020ன் முதல் கால்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தகைய பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படும் டட்சன் கார்களின் தயாரிப்பிற்காக நிஸான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

நிஸான் இந்தியா நிறுவனம் தற்சமயம் சன்னி மாடல்களையும் என்ஜின் உள்ளிட்ட பாகங்களையும் எகிப்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தோனிசியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 65,000 யூனிட்களுக்கு இதன் தேவை இன்னும் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைக்கு 22,000 யூனிட்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

இந்த எண்ணிக்கை அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதுதவிர இந்நிறுவனம் எஸ்யூவி மாடல்களையும் ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. இவ்வாறு நிஸான் நிறுவனம் மற்ற நாடுகளுக்கு மாடல்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு சில காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

அதாவது இந்தியாவில் உள்ள தொழிற்நுட்பம் மற்றும் போக்குவரத்து வசதிகளில் வாகனங்களை தயாரிப்பது உலகில் மற்ற நாடுகளை விடவும் மிகவும் விலை குறைந்ததாக உள்ளதாக நிஸான் நிறுவனம் நினைக்கிறது. இந்தியாவில் தயாரித்து இந்திய மார்கெட்டில் விற்பது இன்னும் செலவு குறைவாக உள்ளதால் தான் தனது கார்களுக்கு பல சலுகைகளை நிஸான் நிறுவனம் அறிவித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

கடந்த ஆண்டில் 2.10 லட்சம் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனம் 1.82 லட்சம் வாகனங்களை தயாரித்து முடித்தது. இவ்வளவு அதிகமான தயாரிப்புகளை தயாரித்த போதிலும் தற்சமயம் ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை ஆர்என்ஏஐபிஎல் நிறுவனத்தை ஒன்றும் செய்யவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம், இந்த 2.10 தயாரிப்புகளில் பெரும் பகுதியை இந்நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டது என்ற ஒன்று தான்.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

சென்னைக்கு அருகே ஒரகடத்தில் உள்ள இந்த ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா ப்ரைவேட் லிமிடேட் (ஆர்என்ஏஐபிஎல்) தொழிற்சாலையில் வருடத்திற்கு நான்கு லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ரெனால்ட் இந்தியா ப்ரைவேட் லிமிடேட் மற்றும் நிஸான் மோட்டார் இந்தியா ப்ரைவேட் லிமிடேட் என இரு நிறுவனத்தின் வாகனங்கள் மட்டும் தான் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து விற்பனையாகமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன?

டட்சன் கார்கள் பெருமளவில் இந்தியாவில் விற்பனையாவதில்லை. இதனால் தான் டட்சன் ப்ராண்ட் கார்களின் தயாரிப்பு எந்த விதத்திலும் நின்றுவிட கூடாது என்பதற்காக நிஸான் நிறுவனம் அதன் மாடல்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறது. இந்தியாவில் விற்பனை செய்வது கடினம்; ஆனால் உருவாக்குவது மிக எளிது எனவும் கூறுகிறது, நிஸான் இந்தியா நிறுவனம்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India To Export 8,000 Datsun & 65,000 Sunny Cars
Story first published: Saturday, November 9, 2019, 20:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X