டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

ஏஎம்டி கியர்பாக்ஸைவிட பல்வேறு வகையிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கிறது. அதன்படி, தனது பட்ஜெட் விலை கார் மாடல்களான டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி கியர்பாக

நிஸான் கிக்ஸ், டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

இந்திய கார் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களின் சாய்ஸாக அமைந்துள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவும், விலையையும் சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருப்பதால் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்குவதற்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், நிஸான் கார் நிறுவனம் சற்று வித்தியாசமாக சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளை தனது கார்களில் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

ஏஎம்டி கியர்பாக்ஸைவிட பல்வேறு வகையிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கிறது. அதன்படி, தனது பட்ஜெட் விலை கார் மாடல்களான டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, இந்த கார்களின் மதிப்பை உயர்த்தவும் முடியும்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

டட்சன் கார்கள் தவிர்த்து, கிக்ஸ் எஸ்யூவியிலும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை வழங்குவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது. நிஸான் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு உயர் அதிகாரி ஹர்தீப் சிங் டெய்னிக் பாஸ்கர் தளத்திற்கு அளித்த பேட்டியில், டட்சன் கோ, கோ ப்ளஸ் மற்றும் கிக்ஸ் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு விரைவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையம், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கிறது. இனி சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு!

வரும் பண்டிகை காலத்தில் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறும். சிவிடி கியர்பாக்ஸ் அதிர்வுகள் குறைவான சிறந்த செயல்திறனையும் வெளிப்படுத்தும் என்பதால் வாடிக்கையைாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #நிஸான்
English summary
Cars with automatic transmission are in high demand at the moment, and manufacturers are doing everything they can to add AMTs to their existing line ups. Nissan is set to launch CVT automatic options for the Datsun GO and the GO+ variants, and also for the recently launched Kicks.
Story first published: Sunday, August 18, 2019, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X