நிஸானுக்கு புதுத்தெம்பை வழங்கிய கிக்ஸ் எஸ்யூவியின் விற்பனை!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

கடந்த மாதம் 22ந் தேதி புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கவர்ச்சிகரமான தோற்றம், இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற எஞ்சின் தேர்வுகள், சிறந்த வசதிகளுடன் ரூ.9.55 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்தது.

முதல் மாதமே புதிய நிஸான் கிக்ஸ் விற்பனை ஜோர்!

இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 1,370 நிஸான் கிக்ஸ் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் தத்தளித்து வந்த நிஸான் நிறுவனத்திற்கு இந்த விற்பனை எண்ணிக்கை புதுத்தெம்பை அளித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள நிஸான் கிக்ஸ் எஸ்யூவியைவிட இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் மாடல் வடிவத்தில் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இடவசதி கூடுதலாக இருக்கிறது. மேலும், இந்திய சாலை நிலைகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளுக்கு தக்கவாறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

முதல் மாதமே புதிய நிஸான் கிக்ஸ் விற்பனை ஜோர்!

இந்த புதிய காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஈக்கோ டிரைவிங் மோடு வசதி, காரை பார்க்கிங் செய்யும்போது 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறத்தை காட்டும் கேமரா வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கட்டமைப்புடன் வந்துள்ளது.

முதல் மாதமே புதிய நிஸான் கிக்ஸ் விற்பனை ஜோர்!

ரெனோ டஸ்ட்டர், கேப்ச்சர் மற்றும் நிஸான் டெரானோ உள்ளிட்ட பல மாடல்களில் பயன்படுத்தப்படும் இந்தியர்களின் நம்பகத்தன்மையை பெற்ற பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இப்போது இல்லை.

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக வந்திருப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நிச்சயம் நிஸான் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் மாதமே புதிய நிஸான் கிக்ஸ் விற்பனை ஜோர்!

ஏனெனில், கடந்த டிசம்பரில் நிஸான் நிறுவனம் 224 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால், தனது அங்கமாக செயல்படும் டட்சன் பிராண்டில் 2,141 கார்களையும் விற்பனை செய்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் நிஸான் நிறுவனத்தின் விற்பனை 1,500 யூனிட்டுகளை கடந்துள்ளது.

கடந்த மாதம் நிஸான், டட்சன் ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் 3,146 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வரும் மாதங்களிலும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கான வரவேற்பு தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 7, 2019, 17:05 [IST]
English summary
Japanese-origin Nissan has sold only 224 units back in December 2018 while Datsun India clocked 2141 units. Coming to January 2019 i.e after the launch of the Nissan Kicks, the figure went up to 1500 units (3146 units with the inclusion of Datsun models). The company sold 1370 Nissan Kicks units in the very first month of launch itself.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X