மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். விலை குறைவான XL வேரியண்ட், நடுத்தர வசதிகள் கொண்ட XV மற்றும் XV Premium மற்றும் அதிக வசதிகள் நிறைந்த XV Premium Option ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

நிஸான் டெரானோ மற்றும் ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட ரெனோ - நிஸான் கூட்டணியின் MO பிளாட்ஃபார்மில்தான் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று மாடல்களில் மிக சிறப்பான டிசைன் அம்சங்களை பெற்ற மாடலாக நிஸான் கிக்ஸ் வந்துள்ளது.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎஸ் பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

டீசல் எஞ்சின் அதிகபட்சமாமக 110 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் மாடல்கள் 2 வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே வந்துள்ளன.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் XL பேஸ் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சைடு மிரர்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

அடுத்து XV வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல்கள், பனி விளக்குகள், ரூஃப் ரெயில்கள், ஆர்ம் ரெஸ்ட் வசதியுடன் பின் இருக்கை, ரியர் வைப்பர், 8 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் மற்றும் வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

XV Premium வேரியண்ட்டில் லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

XV Premium Option என்ற வேரியண்ட்டில் கார்னரிங் பனி விளக்குகள், க்ரோம் ஆக்சஸெரீகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோ வைப்பர், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், பின்புற பனி விளக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் இரட்டை வண்ணக் கலவை பெயிண்ட் ஷேடுகளில் கிடைக்கும்.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிானது பியர்ல் ஒயிட், பிளேடு சில்வர், பிராரன்ஸ் க்ரே, ஆம்பர் ஆரஞ்ச், டீப் புளூ பியர்ல், நைட் ஷேடு மற்றும் ஃபயர் ரெட் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் பியர்ல் ஒயிட் - ஆம்பர் ஆரஞ்ச், பியர்ல் ஒயிட்- ஓனிக்ஸ் பிளாக், பிரான்ஸ் க்ரே - ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் ஃபயர் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் ஆகிய இரட்டை வண்ணங்களில் கிடைக்கும்.

மிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.9.55 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.14.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. போட்டியாளர்களாக கருதப்படும் ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் போன்ற எஸ்யூவி மாடல்களை விட விலை மிக குறைவாக இருப்பதால் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2019, 13:47 [IST]
English summary
Nissan India has launched their latest SUV offering, the Kicks SUV in the Indian market at a starting price of Rs 9.55 lakh, ex-showroom (India). Bookings for the new Kicks SUV has commenced for an amount of Rs 25,000 across all dealerships in the country. The Nissan Kicks is available in four trims — XL, XV, XV Premium and XV Premium Plus. The top-spec XV Premium Plus will come with a price tag of Rs 14.65 lakh, ex-showroom (India).
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+