நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிஸான் நிறுவனத்தின் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி நாளை விற்பனைக்கு அறிமுகமாகிறது.தற்போதுள்ள எஸ்யூவி கார்களில் பெரிய காராக கருதப்படும் கிக்ஸ் எஸ்யூவி மற்ற நிறுவன எஸ்யூவி கார்களுக்கு விற்பனையில் மிக பெரிய சவாலாக இருக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை மனதில் கொண்டு புத்தம் புதிய கிக்ஸ் எஸ்யூவியை நிஸான் நிறுவனம் நாளை விற்பனைக்கு களமிறக்க உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட நிஸான் கிக்ஸ் களம் இறங்குகிறது.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

டஸ்ட்டர், டெரானோ ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட, நிஸான் - ரெனோ கூட்டணியின் B0 பிளாட்ஃபார்மில் புதிய கிக்ஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடல் பரிமாணத்தில் சற்று பெரிய காராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

நிஸான் நிறுவனத்தின் வி வடிவிலான க்ரில் அமைப்பு, பெரிய ஏர்டேம், நேர்த்தியான ஹெட்லைட் அமைப்பு ஆகியவற்றுடன் முகப்பு டிசைன் கவர்கிறது. பம்பர் அமைப்பில் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னோக்கி சரியும் கூரை அமைப்பு, 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவை பக்கவாட்டு டிசைனுக்கு கவர்ச்சி சேர்க்கின்றன. பின்புறத்தில் முக்கோண வடிவிலான கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர், 360 டிகிரி கோண கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

இதன் ரக கார்களில் முதல்முறையாக 360 டிகிரி கேமரா இந்த காரில் இடம்பெற்றுள்ளது. சொகுசு கார்களில் காணக்கிடைக்கும் 360 டிகிரி கோண கேமரா மூலமாக, காரின் சுற்றுப் புறத்தை முழுமையாக கண்காணித்து எளிதாக பார்க்கிங் செய்ய முடியும்.

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

டெரானோ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

MOST READ:வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

நாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...!!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 106 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும் வெளிப்பபடுத்தும். தற்போதுள்ள எஸ்யூவி கார்களில் பெரிய காராக கருதப்படும் கிக்ஸ் எஸ்யூவி மற்ற நிறுவன எஸ்யூவி கார்களுக்கு விற்பனையில் மிக பெரிய சவாலாக இருக்கும்

Most Read Articles
English summary
Nissan Kicks Launch Tomorrow In India- Read in Tamil
Story first published: Monday, January 21, 2019, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X