லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

ரேஞ்ச் ரோவர், ஃபோர்டு போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் எஸ்யூவி கார்களில் லெதர் சீட் பயன்படுத்துவதை குறைத்து வருகிறது. சுற்றுசூழலை பாதுகாக்கவும், விலங்குகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும் அந்நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

லெதர் பொருட்கள் ஆடு, மாடு மற்றும் எருமை போன்ற விலங்குகளின் தோல்களின் மூலம் செய்யப்படுகிறது. லெதர் பொருட்களை செய்ய பற்பல விலங்குகள் கொல்லப்படுவதாக சர்ச்சை கிளம்பியது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான பொருட்களை கொண்டு இனி எஸ்யூவி கார்களின் சீட்களை தயாரிக்க முடிவுசெய்துள்ளதாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஃபெராரி கார் நிறுவனங்கள் மட்டுமே அதிக அளவில் லெதர் சீட்களை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவங்களை விரைவில் லெதர் சீட் உபயோகிப்பதை குறைக்க வேண்டும் என விலங்குகள் நலவாரியங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விலங்குகள் கொல்லப்படுவது மட்டுமின்றி லெதர் தயாரிப்பில் ஏற்படும் புகையால் சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான பொருட்களை கொண்டு சீட்களை தயாரிக்கும் விதத்தில் ரேஞ் ரோவர் நிறுவனம் ரேஞ் ரோவர எவோக் எஸ்யூவியில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தயாரிக்கப்படும் "குவாட்ரட்" என்ற பிரீமியம் பொருளினை கொண்டு கார் சீட்டினை தயாரித்து வருகிறது. மேலும் வாடிக்கையளர்கள் தேவையினை கருதி யூகலிப்டஸ் கலவை கொண்டு கார் சீட்களை தயாரித்து வருகிறது.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

இதுபோன்று கடந்த 2011ம் ஆண்டு முதல் ஃபோர்டு நிறுவனமும் தனது பெரும்பாலான கார்களுக்கு சோயாபீன் சார்ந்த பொருளினை வைத்து கார் சீட்கள் தயாரித்துள்ளது. மேலும் ஃபோர்டு நிறுவனம் கார் சீட்கள் தயாரிக்க சோயா, கோதுமை, அரிசி, ஆமணக்கு, கெனெஃப் (ஹபிஸ்கஸ்), மரத்தின் செல்லுலோஸ், சணல் மற்றும் தேங்காய் ஆகிய எட்டு பொருட்களை வைத்தே கார் சீட்களை தயாரித்து வருகின்றார். மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக 7 வருடங்களுக்கு முன்பே இயற்கை பொருட்களை வைத்து எஸ்யூவி கார்களுக்கு சீட்கள் தயாரித்துள்ளது ஃபோர்டு நிறுவனம்.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

எஸ்யூவி கார்களின் சீட்கள் மட்டுமின்றி ஸ்டீயரிங் வீல்கள், இன்டிரியர்கள் மற்றும் கியர் ஷிஃப்ட்டுகள் உள்ளிட்ட பாகங்களில் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான பொருட்களை கொண்டு பொருட்களை தயாரிக்க வேண்டும் என பீட்டா இயக்கம் வலியுறுத்தி வருகிறது. மேலும் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கார் உபகரணங்கள் தயாரிப்பதன் மூலம் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் என கார் நிறுவனங்களை பீட்டா வலியுறுத்தி வருகிறது.

லெதர் சீட்களை கைவிடும் கார் நிறுவனங்கள்: ஏன் என தெரிந்தால் அசந்து போவீர்கள்?

கார்களின் எண்ணிகை அதிகரித்து வரும் சூழலில் லெதர் சீட்கள் அதிகரித்தல் அது விலங்குகளுக்கும், சுற்றுசூழலுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே இதனை கருத்தில் கொண்டு ரேஞ்ரோவர் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் முயற்சியை போன்று மற்ற நிறுவங்களும் பாதுகாப்பான பொருட்களை கொண்டு ஏ=சீட்கள் மற்றும் கார் உபகரணங்கள் தயாரிக்க வேண்டும் என்பது விலங்குகள் நல மற்றும் சுற்றுசூழல் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2019, 15:36 [IST]
English summary
No More Leather for Your SUV Seats: Read More in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+