போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

பேருந்து ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராத செல்லாண் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் வெளிவரும் வாகனம் சார்ந்த செய்திகள் அனைத்தும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைக்கின்றன. இதற்கு, வாகன ஓட்டிகள் பெரும் உச்சபட்ச அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை போக்குவரத்து விதமீறல்களே இல்லாத நாடாக உருவாக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு அறிமுகம் செய்தது.

அந்தவகையில், முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதங்களை பத்து மடங்கு உயர்த்தி அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

ஆகையால், போலீஸார் இதனைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ட அபராதத் தொகையை வழங்கி வருகின்றனர். அவ்வாறு, வழங்கப்படும் அபரதங்கள் பெரும்பாலும், வாகனங்களின் விலைக்கு ஈடு கொடுக்கும் வகையில் காணப்படுகின்றது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

இதுவே, மக்கள் மத்தியில் பெரும் களோபரத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் வசிக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

இத்தகைய முரண்பாடான அபராத செல்லாணை அதேபகுதியில் வசிக்கும் நிரன்கர் சங்கர் என்பவருக்குதான் போலீஸார் வழங்கியுள்ளனர். இவர்தான் அப்பேருந்திற்கு உரிமையாளர் கூறப்படுகின்றது. அதேபோன்று, இந்த சம்பவம் செப்டம்பர் 11ம் தேதி அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போதுதான் சமூக வலைதளங்களால் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

நிரன்கர் சங்கர் தனியார் தொழிற்சாலை ஒன்றிற்காக பேருந்தை இயக்கி வருகின்றார். இவர், ஊழியர்களை குறிப்பிட்ட இடங்களில் இருந்து அழைத்துச் செல்வது மற்றும் கொண்டுபோய் சேர்ப்பது என்ற பணியை மேற்கொண்டு வருகின்றார்.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

இந்த நிலையில், செல்லாண் வழங்கப்பட்ட அன்றைய தினம், ஊழியர்களை அழைத்து வரும்போது நிரன்கர் சீட் பெல்ட் அணியவில்லை என கூறப்படுகின்றது. அப்போது, வாகனத்தை மடக்கிய நொய்டா போக்குவரத்து போலீஸார் அவரை மடக்கி விதிமீறலுக்கான அபராதச் செல்லாண் வழங்கியுள்ளனர்.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

அப்போது, அரங்கேறிய குழப்பத்தின் காரணமாக பேருந்து இயக்குநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அபராத தொகை, அம்மாநில சீர்திருத்தத்தின்படி, ரூ. 500 ஆகும். இந்த குழப்பத்திற்கான உரிய காரணம் தெரியவில்லை. இருப்பினும், போலீஸாரின் கவனக்குறைவால் இந்த தவறு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

போலீஸாரின் இந்த கவனக்குறைவற்ற செயலுக்கு அம்மாநிலத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதேசமயம், பேருந்து ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் வழங்கப்பட்ட சம்பவம் நகைப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாரின் செயலால் நகைப்பலை: ஹெல்மெட் அணியவில்லை என பேருந்து ஓட்டுநருக்கு செல்லாண்!!!

இதுகுறித்து கூடுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஹிமான்ஷு திவாரி கூறியதாவது, "பேருந்து ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்தினாலயே மடக்கப்பட்டார். ஆனால், அவருக்கு தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அப்டேட் செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதராணத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Noida Police 'mistakenly' Issued Challan For Driving Without Helmet Bus Driver. Read In Tamil.
Story first published: Tuesday, September 24, 2019, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X