மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

பேட்டரியில் இயங்கும் வாடகை கார்களுக்கான உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு வசதி நார்வே நாட்டில் நிறுவப்பட இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

புதுமையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் உலக அளவில் நார்வே முன்னோடியாக விளங்குகிறது. மேலும், அந்நாட்டு தலைநகர் ஓஸ்லோவில் மின்சார கார் பயன்பாட்டை முழு அளவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

வரும் 2023ம் ஆண்டில் பேட்டரியில் இயங்கும் வாடகை கார்களை மட்டுமே தலைநகர் ஓஸ்லோவில் அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

அதன்படி, பேட்டரியில் இயங்கும் வாடகை கார்களில் எளிதாக சார்ஜ் ஏற்றும் வசதியை வழங்குவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. ஓஸ்லோவில் உள்ள மின்சார வாடகை கார் நிறுத்தும் வளாகத்தில் இந்த கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

பயணிகளை ஏற்றுவதற்காக கார்கள் வரிசையில் மெதுவாக நகரும். அப்போது, மின்சார காரின் பேட்டரியானது வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏறிவிடும்.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

இதற்காக, வாடகை கார்கள் வரிசையில் செல்லும் தடத்தில், மின்சாரத்தை வழங்கும் உலோக தகடுகள் பதிக்கப்பட இருக்கின்றன. கார்களில் இருக்கும் ரிசீவர் கருவி மூலமாக உலோக தகட்டிலிருந்து மின்சாரம் கிரகிக்கப்பட்டு, பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படும்.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் முறை மூலமாக மின்சார வாடகை கார்களில் சார்ஜ் செய்வதற்கென அதிகம் மெனக்கெட வேண்டாம். போகிற போக்கிலேயே கார்களில் சார்ஜ் ஏறிவிடும் என்பதால், நேரம் மிச்சமாகும்.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

இந்த வயர்லெஸ் சார்ஜர் மூலமாக 75 கிலோவாட் வரை மின்னேற்றம் செய்ய முடியும் என்றும் இந்த சார்ஜர் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

மேலும், இது குயிக் சார்ஜர் எனப்படும் விரைவான முறையில் சார்ஜ் ஏற்றும் வசதியாக இருக்கும். எனவே, கார்கள் வரிசையில் மெதுவாக நகரும்போதே பேட்டரி போதுமான அளவு சார்ஜ் ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த ஃபோர்ட்டம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மொமென்டம் டைனமிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த புதுமையான வயர்லெஸ் சார்ஜர் கட்டமைப்பு வசதியை மின்சார வாடகை கார்கள் பார்க்கிங் வளாகத்தில் நிறுவ இருக்கின்றன.

மின்சார வாடகை கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேஷன்: நார்வே நாட்டின் புதிய முயற்சி!

இந்த முறையில் மின்சார கார்களுக்கான சார்ஜர் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுவது உலகிலேயே முதல்முறையாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலமாக, நேர விரயமும், மின்சார இழப்பும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Norway Government is planning to install wireless chargers for electric taxi cars to curb time and energy loss.
Story first published: Saturday, March 23, 2019, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X