பென்ஸ் காருக்கு இணையான வசதிகளுடன் மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்.. எகிறும் எதிர்பார்ப்பு
பென்ஸ் காரின் வசதியுடன் மிக மலிவான விலையில் களமிறங்கவுள்ள புதிய காரின் முன்பதிவு உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய எஸ்யூவி ரக கார் வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் இன்று முக்கிய பேசு பொருளாக உருவெடுத்துள்ளது ஹெக்டர் (Hector). இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார்தான் ஹெக்டர்.

எஸ்யூவி ரகத்தை சேர்ந்த எம்ஜி ஹெக்டர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி, பல்வேறு அதிநவீன வசதிகளுடன் வரவிருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வெகு விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எம்ஜி நிறுவனம் இங்கு ஒரு மாதத்திற்கு மூன்று ஆயிரம் ஹெக்டர் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால் இது மிக கடினமான இலக்கு. என்றாலும் ஓரளவிற்கு குறைவான விலையில் அறிமுகம் செய்வதன் மூலம் இந்த இலக்கை எட்டலாம் என எம்ஜி நிறுவனம் கருதுகிறது. ஹெக்டர் கார் தொடர்பான பெரும்பாலான விஷயங்களை எம்ஜி நிறுவனம் கிட்டத்தட்ட வெளியிட்டு விட்டது.

ஆனால் எம்ஜி ஹெக்டர் காருக்கு எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் அந்த கேள்விக்கும் எம்ஜி நிறுவனம் இன்று (மே 30) அதிகாரப்பூர்வமாக விடையை வழங்கியுள்ளது.

இந்தியா முழுக்க உள்ள 120 அவுட்லெட்களில், வரும் ஜூன் 4ம் தேதி முதல் எம்ஜி ஹெக்டர் காரை நீங்கள் புக்கிங் செய்ய முடியும். இந்தியாவின் 50 நகரங்களில் உள்ள அந்த 120 அவுட்லெட்கள் தொடர்பான முழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

எம்ஜி இந்தியா நிறுவனத்தின் வெப்சைட்டில் நீங்கள் இதனை தெரிந்து கொள்ள முடியும். 120 அவுட்லெட்கள் என்ற எண்ணிக்கையை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 250 ஆக உயர்த்த வேண்டும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே mgmotor.co.in என்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வெப்சைட்டில் வரும் ஜூன் 4ம் தேதி மதியம் 12 மணி முதல் ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கப்படவுள்ளது. இதனால் எம்ஜி ஹெக்டர் காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இது பியட் நிறுவனத்தின் மல்டிஜெட் யூனிட் ஆகும். இந்த செக்மெண்ட்டில் உள்ள டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவி கார்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இதுதவிர 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் 141 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் காரின் ஹைபிரிட் வேரியண்ட்டையும் வழங்கவுள்ளது. இதில், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்தப்படவுள்ளது. ரூ.15-20 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், இந்தியாவில் கிடைக்கும் மிக மலிவான 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் வாகனம் என்ற பெருமையை எம்ஜி ஹெக்டர் காரின் ஹைபிரிட் வேரியண்ட் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மார்க்கெட்டில் தற்போதைய நிலையில் கிடைக்கும் இத்தகைய ஒரே வாகனம் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ்தான். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 43.46 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எம்ஜி ஹெக்டர் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த எம்ஜி ஹெக்டர்தான் இந்த செக்மெண்ட்டின் முதல் கனெக்டட் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 100 கனெக்டட் கார் வசதிகளை எம்ஜி ஹெக்டர் பெற்றுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காரணங்களால்தான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹெக்டர் காரை எம்ஜி நிறுவனம் அனேகமாக அடுத்த மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடவுள்ளது. ஹெக்டர் காரை தொடர்ந்து இஇஸட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ளது.

தற்போது விற்பனைக்கு வரவிருப்பது ஹெக்டர் காரின் 5 சீட்டர் மாடல் ஆகும். இதன் 7 சீட்டர் மாடலையும் எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் அடுத்த ஆண்டு லான்ச் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








