செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

அடுத்து ஒரு முக்கிய படியாக, வாடிக்கையாளர்கள் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும் வாய்ப்பையும் ஓலா கார் நிறுவனம் வழங்க இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும் திட்டத்தை ஓலா நிறுவனம் விரைவில் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

நாட்டின் பெருநகரங்களின் போக்குவரத்தில் ஓலா, உபர் ஆகிய வாடகை கார் நிறுவனங்கள் முதுகெலும்பாக விளங்குகின்றன. மொபைல் அப்ளிகேஷன் மூலமாக கார்களை முன்பதிவு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் வீட்டு வாசலுக்கே கார் வந்துவிடுவதால், சொந்த கார் வைத்திருப்பவர்கள் கூட ஓலா, உபர் நிறுவனங்களின் வாடகை கார்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

இந்த நிலையில், ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை மனதில் வைத்து பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நகர்புறங்களில் உள்ளூர் வாடகை கார் திட்டம் தவிர்த்து, வெளியூர் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கான வாடகை கார் திட்டத்தையும் செயல்பாட்டில் வைத்துள்ளது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

இந்த நிலையில், அடுத்து ஒரு முக்கிய படியாக, வாடிக்கையாளர்கள் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது. அதாவது, ஓட்டுனர் இல்லாமல் வாடிக்கையாளரே காரை ஓட்டிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

தனிநபர் மட்டுமின்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், வர்த்தகர்களை குறிவைத்து இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது ஓலா கார் நிறுவனம்.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

தற்போது ஸூம்கார், மைல்ஸ், டிரைவ்ஈஸி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஓலா கார் நிறுவனமும் இந்த செல்ஃப் டிரைவ் வாடகை கார் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

முதல்கட்டமாக 10,000 கார்களுடன் இந்த துறையில் இறங்குவதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதுடன், 500 மில்லியன் டாலரகளை இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயனளிக்கும் விதத்தில், கார்களுக்கான வாடகை கட்டணத்தை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால், ஓலா செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

மேலும், ஸூம்கார், மைல்ஸ், டிரைவ்ஈஸி ஆகிய கார் நிறுவனங்களுக்கு கடும் சந்தைப் போட்டியை ஓலா செல்ஃப் டிரைவிங் கார் திட்டம் கொடுக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் மலிவான கட்டணத்தில் செல்ஃப் டிரைவிங் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா!

கடந்த மாதம் ஓலா கார் நிறுவனத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹூண்டாய் மற்றும் கியா கார் குழுமம் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. மேலும், ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் ரூ.650 கோடியை ஓலா கார் நிறுவனத்தில் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2019, 11:28 [IST]
English summary
According to reports, Ola to launch self-drive car business soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+