போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

பல கோடி ரூபாய் மதிப்புடைய விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சின்னாபின்னமாகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஈடுபாடு காட்ட கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ''லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்'' என விராட் கோஹ்லியே பல முறை கூறியுள்ளார்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

லக்ஸரி கார்களை உற்பத்தி செய்து வரும் ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி உள்ளார். இதன் காரணமாக ஏராளமான ஆடி கார்களை விராட் கோஹ்லி வைத்துள்ளார். இதில், ஆடி ஆர்எஸ்5 (Audi RS5) மற்றும் ஆடி ஆர்எஸ்6 (Audi RS6) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

அத்துடன் ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார்களும் விராட் கோஹ்லி வசம் உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோஹ்லியின் அன்புக்குரிய காராக இருந்து வந்தது ஆடி ஆர்8 வி10 (Audi R8 V10) கார்தான். இது 2012ம் ஆண்டு மாடல் கார் ஆகும்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

வெள்ளை நிற ஆடி ஆர்8 வி10 காரில், விராட் கோஹ்லி வலம் வந்ததை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. விராட் கோஹ்லியும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும், ஐபிஎல் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

நெருங்கிய நண்பர்களான இருவரும் ஆடி ஆர்8 வி10 காரில் ஒரு முறை டெல்லி நகர சாலைகளில் வலம் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இது விராட் கோஹ்லியின் கார்தான். கிறிஸ் கெய்லை ஏற்றிக்கொண்டு, விராட் கோஹ்லிதான் காரையும் ஓட்டி சென்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுதவிர ரேஸ் டிராக்குகளுக்கும் கூட தனது ஆடி ஆர்8 வி10 காரை விராட் கோஹ்லி எடுத்து சென்றுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு (BIC-Buddh International Circuit) ஒரு முறை தனது ஆடி ஆர்8 வி10 காரில் விராட் கோஹ்லி வந்தார்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பார்முலா 1 (Formula One) ரேஸ் டிராக் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் அவரது அன்புக்குரிய ஆடி ஆர்8 வி10 காரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

ஆனால் விராட் கோஹ்லி பயன்படுத்திய ஆடி ஆர்8 வி10 கார், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு தூசு படிந்து, பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது விராட் கோஹ்லியின் ஆடி ஆர்8 வி10 கார்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

Source: Automobili ardent

நடந்தது இதுதான். விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை, புரோக்கர் ஒருவர் மூலமாக, சாஹர் தாக்கர் எனும் ஷாஹி என்பவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்தார். இந்த காரின் உண்மையான விலை சுமார் 2.5 கோடி ரூபாய். ஆனால் 60 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

விராட் கோஹ்லியிடம் இருந்து காரை வாங்கி சாஹர் தாக்கர், தனது காதலிக்கு பிறந்த நாள் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் பின்நாட்களில் இந்தியா முழுக்க பெரும் புயலை கிளப்பிய கால் சென்டர் முறைகேடு குற்றச்சாட்டு ஒன்றில் சாஹர் தாக்கர் சிக்கினார்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஆடி ஆர்8 வி10 கார் மும்பை போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சமயத்தில், ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்படாமல் விராட் கோஹ்லியின் பெயரில் இருந்தது பரபரப்பை கூட்டியது.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

எனவே விராட் கோஹ்லியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை சாஹர் தாக்கருக்கு விற்பனை செய்ததும், அதன் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும், போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

விசாரணை முடிவில், சாஹர் தாக்கரின் மோசமான நடவடிக்கைகள் எதையும் விராட் கோஹ்லி அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை மும்பை போலீசார் கண்டறிந்து அறிவித்தனர்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

முன்னதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி ஆர்8 வி10 கார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது வரை அந்த கார் அங்கேயேதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு உரிய அழகை இழந்து கவலைக்கிடமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது அந்த கார்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

ஆடி ஆர்8 வி10 போன்ற ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார், போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வருவது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு காட்சியை காண்பது என்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை பொறுத்தவரை கொடுமையானது.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

அப்படி இருக்கையில் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த விராட் கோஹ்லியும் நிச்சயம் கவலை அடைந்திருப்பார். கிறிஸ் கெய்ல் உடன் டெல்லியில் நகர் வலம், புத்தா சர்வதேச சர்க்யூட் பயணம் என இந்த கார் கொடுத்த நினைவுகளை விராட் கோஹ்லியால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. ஆனால் அவை அங்கு யாருக்கும் பயன்படாமல் சிதிலமடைந்து விடுகின்றன. இதில், விலை உயர்ந்த வாகனங்களும் அடக்கம்.

பல கோடி மதிப்பிலான விராட் கோஹ்லியின் சொகுசு கார் போலீசாரால் பறிமுதல்... அவர் செய்த தவறு இதுதான்...

எனவே இப்படிப்பட்ட வாகனங்கள் எதையும் வீணாக விடாமல், உடனடியாக ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் காவல் துறைக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அத்துடன் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு குறைந்த விலையில் நல்ல வாகனமும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2019, 13:03 [IST]
English summary
Once Virat Kohli Owned Audi R8 V10 Is Now In Rust And Dust Condition At Mumbai Police Station. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+