இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

வாகனம் இல்லையென்றாலும் அதற்கான பேன்சி எண்ணை முன்கூட்டியே வாங்கும் வகையிலான புதிய அறிவிப்பை ஆர்டிஓ அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஒரு வாகனம் சாலையில் இயங்க எந்த அளவிற்கு எரிபொருள் தேவையோ... அதே அளவிற்கு, அதனை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பதிவெண் முக்கியமாக இருக்கின்றது. இது ஒவ்வொரு வாகனத்திலும் தனித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

அந்தவகையில் இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனங்களுக்கும், அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் நம்பர் பிளேட் வழங்கப்படுகின்றது. இந்த பணியினை அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமாக வாகனங்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கவே இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது.

இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். அவை பல்வேறு நுணுக்கங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அந்தந்த மாநிலத்தை குறிக்கும் வகையில் முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL எனவும் வழங்கப்படுகின்றது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆர்டிஓ-வின் அலுவலக எண் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக TN 01, TN 05 இம்மாதிரியான எண் இடம்பெறும். இதையடுத்தே வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண் ஆங்கில எழுத்துகளை (A,B,C,D) அடுத்து நம்பரில் வழங்கப்படும். உதாரணாக, TN 01 AA 1111 என வழங்கப்படும்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இவ்வாறு நாட்டில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேகமாக, அதை இனம் கண்டறியும் வகையில் பதிவெண்கள் வழங்கப்படுகின்றது. இது, வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய இது உதவும்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

அதேசமயம், பலர் தங்களது வாகனங்களை, எளிதில் மறக்கமுடியாத மற்றும் கண்ட உடன் கண்களை கவரும் வகையிலான பேன்சி எண்களால் அலங்கரிக்க விரும்புகின்றனர்.

இந்த கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆகையால் பேன்சி எண்மீதான மோகத்தைத் தீர்க்கும் வகையில், ஆன்லைனில் பேன்சி எண்களை விற்பனைச் செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது நம் தமிழகத்தில் இல்லை எண்பதுதான் வேதனையளிக்கும் உரியது.

MOST READ: ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறைதான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கையினால், பேன்சி எண் ஆர்வலர்கள் ஏலம் எடுக்க ஆர்டிஓ அலவலகங்களை நாட வேண்டும் என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. பேன்சி எண்ணிற்கான விற்பனை இனி ஆன்லைனில் விட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

MOST READ: மாஸ் காட்டப்போகும் தமிழக அரசு... இன்னும் மூன்றே வாரங்களில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு இதுதான்..

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இதற்கான அறிவிப்பாணையைதான் பிஹார் போக்குவரத்துத்துறை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.

இந்த ஏலமானது, ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை விடப்பட உள்ளது. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆர்டிஓ அலுவலகம் என எங்குவேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

வாகனங்களுக்கு ஆடம்பரமான எண்களை ஒதுக்குவதற்கான புதிய முறைக்கு அம்மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 646 கவர்ச்சிகரமான எண்கள் சலுகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

பொதுவாக, பிறந்ததேதி, கல்யாண நாள் மற்றும் ராசி எண் என்றுதான் பலர் பேன்சி எண்களை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு, ஒரே எண்ணை இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தால், அவர்களுக்கு இ-ஏலம் விடப்பட உள்ளது. இந்த இ-ஏலத்திற்காக ரூ. 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆர்டிஓ அலுவகம் திருப்பி தராது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இந்த இ-ஏலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கே அந்த பேன்சி எண் வழங்கப்படும். மேலும், அதிக தொகையில் ஏலம் எடுத்தவர், ஏழு நாட்களுக்குள் வங்கி வரைவோலை அல்லது இணையதளம் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். இதில், தவறினால் பேன்சி மீண்டும் ஏலத்திற்கு சென்றுவிடும்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

அதேபோன்று, ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணை 90 நாட்களுக்குள் வாகனத்துடன் பதிவு செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த எண் காலாவதியாகிவிடும் எனவும் கூறப்படுகின்றது. அதேசமயம், ஏல தொகையும் திருப்பு தரப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் ஆர்டிஓ முன்வைத்துள்ளது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இத்துடன், தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான வெவ்வேறு அடிப்படை விகிதங்கள் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

வாகன பதிவெண் விவகாரத்தில் இத்தகைய சிறப்பு முறை கையாளப்பட்டு வரும் அதேவேலையில், பதிவெண்ணைச் சார்ந்த மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலான ஓர் சம்பவம் அண்மையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அரங்கேறியது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் இங்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

சேஸிஸ் நம்பர், கலர் மற்றும் மாடல் பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புதிய பதிவு எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன்படி ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் தனித்துவமான புதிய பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஆனால் ஒரே மாதிரியான இரண்டு கார்கள், ஒரே பதிவு எண்ணுடன் சாலைகளில் இயங்கிய வினோதமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தனைக்கும் அந்த இரண்டு கார்களும் ஒரே பகுதியை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு ஹூண்டாய் வெர்னா செடான் கார்கள் ஒரே பதிவு எண்ணுடன் சாலையில் இயக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் அவை இரண்டும் ஒரே கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இதுதவிர அந்த இரண்டு கார்களும் ஒரே 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைதான் பெற்றுள்ளன. கத்துவா அருகே உள்ள லக்கான்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஜடின்தர் ஷர்மா என்பவர் அளித்த ஒரு புகாரின் மூலமாகவே இந்த வினோத சம்பவம் வெளிவர தொடங்கியது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஜடின்தர் ஷர்மா தனது புகாரில், ''அச்சு அசலாக எனது காரை போலவே உள்ள ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று சாலையில் இயங்கி கொண்டுள்ளது. அத்துடன் பதிவு எண்ணும் ஒரே மாதிரியாக உள்ளது'' என்று கூறியிருந்தார். அந்த இரண்டு கார்களும் JK 08 H 0088 என்ற ஒரே பதிவு எண்ணை பெற்றுள்ளன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஜடின்தர் ஷர்மாவிடம் இருந்து புகாரை பெற்று கொண்ட போலீசார் உடனே விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில், ஒரே பதிவு எண்ணுடன் இருந்த மற்றொரு ஹூண்டாய் வெர்னா காரையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இந்த கார் முகமது ரஃபீக் என்பவருக்கு சொந்தமானது. அவரும் கத்துவா பகுதியை சேர்ந்தவர்தான். ஆனால் முகமது ரஃபீக்கின் ஹூண்டாய் வெர்னா காருக்கு, ஆர்டிஓ அலுவலக விதிமுறைகளின்படி, உண்மையான பதிவு எண்தான் பெறப்பட்டிருந்தது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

எனவே புகார்தாரரான ஜடின்தர் ஷர்மாவின் காரில் போலியான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஜடின்தர் ஷர்மாவிற்கு காரை விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

அத்துடன் இரண்டு கார்களும் போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை வெளிக்கொணரும் பணிகளில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

ஜடின்தர் ஷர்மாவிற்கு காரை விற்பனை செய்த நபர் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஆர்டிஓ அலுவலகம் மூலமாக பதிவு செய்யாமல் விட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

அதற்கு பதிலாக தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ள மற்றொரு காரை பார்த்து, அதன் பதிவு எண்ணை புதிய காருக்கும் அவர் கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியது தொடர்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் பல்வேறு முறை நடைபெற்றுள்ளன. ஆனால் ஒரே மாடல், ஒரே கலர் ஆகியவற்றை கொண்ட இரண்டு வாகனங்களில் ஒரே நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இது தொடர்பாக Daily Excelsior வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக ஒரு வாகனம் விற்பனை செய்யப்படும்போது, டீலர்ஷிப் தரப்பில் இருந்து புதிய பதிவு எண் கேட்டு உள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்படும். இதன்பின் ஆர்டிஓ அனைத்து தகவல்களையும் பரிசோதித்து பார்த்து விட்டு புதிய பதிவு எண் வழங்குவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இதனிடையே உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (High-Security Registration Plate - HSRP) திட்டம் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தை போன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!

இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க வேண்டுமென்றால், வாகனம் வாங்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதும் அவசியம். சேஸிஸ் நம்பர் மற்றும் விஐஎன் நம்பர் போன்ற வாகனத்தின் தகவல்கள், ஆர்சி (Registration Certificate) போன்ற ஆவணங்களுடன் பொருந்தி செல்ல வேண்டும்.

Most Read Articles

Tamil
English summary
Open Bidding For Fancy Vehicle Numbers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more