சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து, டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, வாகன ஓட்டிகள் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் வரும் என்பதால், கூடுதல் கவனத்துடன்தான் பயணிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, சிறிய தவறை செய்தால் கூட பெரும் விபத்தில் சிக்கி கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிறிய சிறிய தவறுகளை செய்வதன் காரணமாகதான், விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

இந்த சூழலில் கார் டிரைவர் ஒருவர் செய்த தவறின் காரணமாக, கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டும் மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-48ல் நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அப்போது கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் முன்னால் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

ஆனால் காரின் டிரைவர் இடது பக்கத்தில் (Left Side) இருந்து லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றார். அப்போது லாரியும் திடீரென இடது பக்கம் நோக்கி திரும்பியது. இதன் காரணமாக கார் மற்றும் லாரி ஆகியவை மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

இருந்தபோதும் கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் சுதாரித்து கொண்டு வாகனங்களை உடனடியாக ஸ்லோ செய்து விட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் 2 வாகனங்களும் மோதி கொண்டிருக்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

தேசிய நெடுஞ்சாலைகளில் இடது புறத்தில் இருந்து கனரக லாரி போன்ற வாகனங்களை ஓவர் டேக் செய்வது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் நேரவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...

அந்த வீடியோவை ரிஷி சின்கா என்பவர் தற்போது யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவை வைத்து பார்க்கையில், இந்த கார் மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் (Maruti Suzuki S-Cross) ஆக இருக்கலாம் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாகதான் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Most Read Articles
English summary
Overtaking From The Left Side Is So Dangerous: Here Is Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X