டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

டோல்கேட்களில் நீங்கள் இதை செய்தால் இனி 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில், அனைத்து வாகனங்களும் ரொக்கமாக பணம் செலுத்தி செல்ல நீண்ட நேரமாகிறது. இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் பிரச்னையையும் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

இதன் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் டோல்கேட்களில் பாஸ்ட்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் பாஸ்ட்டேக் முறைக்கு மாறுவது அவசியமாகிறது.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

பாஸ்ட்டேக் அட்டையை பெற வாகனத்தின் ஆர்சி புக் மற்றும் வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் 500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். இதில், 250 ரூபாய் திரும்பபெறதக்கது. 100 ரூபாய் பாஸ்ட்டேக் அட்டைக்கானது. 150 ரூபாய் சர்வீஸ் சார்ஜ். இந்த பாஸ்ட்டேக் அட்டையை உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ளலாம்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

தேவைப்படும் சமயங்களில் செல்போனை போன்று இதற்கு உங்களால் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். உங்கள் வாகனம் டோல்கேட்டில் நுழையும்போது அங்குள்ள சிறப்பு உபகரணங்கள் பாஸ்ட்டேக் அட்டையை 'ரீட்' செய்யும். இதன்பின் அந்த டோல்கேட்டிற்கான கட்டணம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து கழித்து கொள்ளப்படும்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

இதற்கென டோல்கேட்களில் பாஸ்ட்டேக் லேன் என பிரத்யேகமான லேன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாஸ்ட்டேக் லேனில் செல்வதன் மூலம் நீங்கள் டோல்கேட்டை விரைவாக கடந்து செல்ல முடியும். பணம் செலுத்த காத்திருக்க தேவையில்லை. இதன் காரணமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

எனவேதான் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஸ்ட்டேக் மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 1 முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என்றாலும், ரொக்கமாக பணத்தை ஏற்று கொள்ள ஒவ்வொரு டோல்கேட்களிலும் ஒரு லேன் இருக்கவே செய்யும்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

ஆனால் ரொக்கமாக பணத்தை செலுத்தி செல்ல ஒரே ஒரு லேன் மட்டுமே இருப்பதால், பாஸ்ட்டேக் இல்லாதவர்கள் டோல்கேட்டை கடக்க நீண்ட நேரம் ஆகலாம். இதற்காக பாஸ்ட்டேக் இல்லாதபோதும், பாஸ்ட்டேக் லேனில் நுழைந்து டோல்கேட்டை கடந்து சென்று விடலாம் என கற்பனை கூட செய்து பார்த்து விடாதீர்கள்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

ஏனெனில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்ட்டேக் இல்லாத வாகன ஓட்டிகள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழையும் பட்சத்தில், அவர்களிடம் இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே பாஸ்ட்டேக் இல்லாத பட்சத்தில், தப்பி தவறி கூட பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழைந்து விடாதீர்கள்.

டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...

இந்த பிரச்னைகளை சமாளிக்க வேண்டுமென்றால், டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு நீங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறி கொள்வது நல்லது. பாஸ்டேக்கை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவானது, சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்களின் நான்-ஸ்டாப் மூவ்மெண்ட்டிற்கும் உதவி செய்யுமா? என்பது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2019, 12:11 [IST]
English summary
Pay Double The Toll Fee If You Enter FASTag Lane From December 1. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+