பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொறுங்கி விபத்து... வீடியோ!

பாஜக பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பிற்காக பயன்படுத்திய ஜீப்பின் கம்பிகள் திடீரென நொறுங்கியதால் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் வருகின்ற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பை அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, அவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் திருவிழா கலை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுவாக இந்தியாவில் பண்டிகைக் காலங்களுக்கு இணையாக தேர்தலையும் திருவிழாவைப் போன்று அரசியல் வாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

அந்தவகையில், மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும்போது விதவிதமான வாகனங்களின் அணிவகுப்பிலும், மேள தாளங்களுடன் அவர்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதற்காக திறந்தவெளி வாகனங்கள் அல்லது மக்களிடம் நேரடி உரையாடலை நிகழ்த்துகின்ற வகையிலாக மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட மாடிஃபை கட்டமைப்பு கொண்ட வாகனம் ஒன்று, திடீரென நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

பாஜக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சண்டா மாத்ரே என்பவரின் பிரச்சாரத்தின்போதுதான் இந்த இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சர்ச்சைக்கு பெயர்போனவர் சண்டா மாத்ரே. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது வாக்குசேகரிப்பிற்கு சென்றிருந்த அவர், தொண்டர்கள் அனைவரும் இருமுறை ஓட்டு பொத்தானை அழுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சட்ட சிக்கலிலும் அவர் சிக்கினார்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

இந்நிலையில், அவர் இன்று (திங்கள்கிழமை) வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனங்களின் கூட்டங்களுக்கு நடுவே ஜீப்பில், மக்களைச் சந்தித்தவாறு சென்றுக் கொண்டிருந்தார்.

இந்த ஜீப் பிரச்சாரத்திற்கென பிரத்யேகமாக பஞ்சாப் மாநிலத்தில் வரவழைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதனை, உறுதி செய்யும் வகையில் அந்த வாகனத்தில் பொருத்தியுள்ள பதிவெண் காணப்படுகின்றது.

அந்த ஜீப், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதைக் கூட வெளிக்காட்டாத வகையில் மாடிஃபை செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அந்தவகையில், ஜீப்பின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்புறங்கள் கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

இதுபோன்று, மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைச் சாலையில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.

ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தலின்போது இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

அந்தவகையில், மண்டா மாத்ரே பயன்படுத்திய ஜீப்பில் உறுதியற்ற கம்பிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாகவே அந்த கம்பிகள் எளிதில் நொறுங்கியுள்ளன.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

இது வெளியாகியுள்ள வீடியோவில், சண்டா மாத்ரே சென்ற ஜீப் அதிகபட்சமாக 40 முதல் 50 கிமீ என்ற வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது. அவருடன் தொண்டர்களும் அந்த ஜீப்பில் பயணிக்கின்றனர். அவ்வாறு, இருவர் மட்டுமே அமர வேண்டிய அந்த இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் நின்றவாறு பயணிக்கின்றனர். அப்போது, சிறிய வேகத்தடை வந்ததையடுத்து, ஜீப்பின் ஓட்டுநர் பிரேக் பிடிக்கின்றார்.

பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ!

அதில், நிலை தடுமாறிய தொண்டர்கள் அனைவரும் ஜீப்பின் கம்பி மீது சாய்ந்தனர். ஆனால், அது உறுதியற்று நின்றுக் கொண்டிருந்ததால், உடனே முன்பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளாகின்றது.

இதில், எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகியவில்லை. ஆனால், காயமுற்ற அனைவரையும் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2019, 18:14 [IST]
English summary
Politicians Jeep Rollbar Collapses During Political Rally. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+