பேருந்தின் மீது தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்... விநோத தண்டனையை வழங்கிய ஊர் மக்கள்... வைரல் வீடியோ..?
அதிவேகத்தில் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சமூக வலைதளங்களான முகப்புத்தகம் மற்றும் யுடியூப் உள்ளிட்டவற்றில் இந்திய வாகன ஓட்டிகளின் மிக மோசமான ஓட்டும் திறன்குறித்த வீடியோக்கள் பல உலா வந்த வண்ணம் இருக்கின்றன.
அந்தவகையில், இணையத்தில் வைரலாகிய வீடியோக்களை வைத்து போலீஸார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் குறிப்பிட்ட வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், வாகனத்தை ஆபத்து விளைவிக்கும் வகையில் இயக்கிய ஓட்டுநருக்கு பொதுமக்களே பாடம் புகட்டிய சம்பவம் மத்திய பிரதேசே மாநிலம் ராவ் பகுதியில் அரங்கேறியுள்ளது. இந்த தண்டனை மிகவும் கடுமையானதாக இல்லையென்றாலும் அப்பேருந்து ஓட்டுநர் மீண்டும் அதே தவறை செய்யாதவாறு இருக்கும் வகையில் ஓர் தரமான தண்டனையாக உள்ளது.

ராவ் நகரம் வழியாக இந்தோர் மற்றும் மோவ் பகுதியை இணைக்கின்ற வகையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள், சாலையில் நெரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலிலும்கூட அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இதற்கு முன்னதாக பல முறை புகாரளித்துள்ளனர். இருப்பினும், இவ்விகாரத்தில் தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் சென்ற பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பகுதி மக்கள், அவர்களாகவே அந்த ஓட்டுநருக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.

அதாவது, அதிவேகமாக இயக்கப்பட்ட பேருந்தை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அந்த டிரைவரை அவர் இயக்கி வந்த பேருந்தின் மீதே ஏற செய்து, கூரை மீது தோப்புக் கரணம் போட கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக, அந்த டிரைவரை குறைந்தது 15 தோப்புக்கரணம் வரை போட வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

கடுமையான தண்டனைகளுக்கு பதிலாக குறைந்தபட்ச தண்டனைகளை விதிமீறி இயக்கும் பேருந்து ஓட்டிகளுக்கு அவர்கள் வழங்கி வருகின்றனர்.

தற்போது, தோப்புக்கரணம் தண்டனைப் பெற்றிருக்கும் பேருந்து டிரைவர், ஏற்கனவே இதுபோன்று பல முறை விதிமீறலில் ஈடுபட்டவர் என கூறப்படுகின்றது. அவ்வாறு, இதற்கு முன்னதாக பல பாதசாரிகள்மீது பேருந்தை உராசியவாறு வாகனத்தை இயக்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

ஆகையால், பேருந்துடன் மடக்கிய பொதுமக்கள், அவரை நடு சாலையிலேயே பேருந்தை நிறுத்தவிட்டு. பின்னர், அதே பேருந்தின் கூரைமீது தோப்புகரணம் போட வைத்துள்ளனர். இதுகுறித்த காட்சிகளை நியூஸ் ஸ்டேட் என்ற சேனல் வெளியிட்டுள்ளது.
தற்போது நாம் பார்த்த இந்த சம்பவம் ராவ் நகரத்திற்கான காவல்நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற்றிருப்பது கூறப்படுகின்றது.

இதுகுறித்த பல முறை புகார்கள் அளித்தும் பலனளிக்காத காரணத்தால் இத்தகைய சூழலை தாங்களே கையாளும் விதமாக அப்பகுதி மக்கள் இந்த தண்டனை முறையை கையிலெடுத்துள்ளனர்.
இச்சம்பவம்குறித்து இந்தோர் பகுதி போக்குவரத்துத்துறை அதிகாரி ஜிதேந்தர் சிங் ரகுவன்ஷி கூறியதாவது, "இதுகுறித்து ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது சிலர் உத்தரவை மீறி செயல்படுகின்றனர். இனி விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் மற்றும் பேருந்துகள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.


Click it and Unblock the Notifications








