ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

"ஜோத்பூரில் நடந்த ராலி பந்தயத்தில் கார் மோதி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஏற்பாட்டாளர்கள் யாரும் உதவவில்லை," என்று பிரபல கார் பந்தய வீரர் கவுரல் கில் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

கடந்த மாதம் ஜோத்பூரில் தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கார் பந்தயம் நடந்தது. மேக்ஸ்பெரியனேஸ், மஹிந்திரா அட்வென்ச்சர், ஜேகே டயர்ஸ், எம்ஆர்எஃப் டயர்ஸ் மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பு ஆகியவை இந்த பந்தயத்தை இணைந்து நடத்தின.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின்போது பந்தய தடத்திற்குள் உள்ளூரை சேர்ந்த மூன்று பேர் பைக் ஒன்றில் திடீரென நுழைந்துவிட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கவுரல் கில் ஓட்டி வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 பந்தய கார் பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அர்ஜுனா விருது பெற்ற கார் பந்தய வீரரான கவுரல் கில் மற்றும் அவரது வழிகாட்டியாக செயல்பட்ட எம்.ஷரீப் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

இந்த நிலையில், முதல்முறையாக விபத்து குறித்து எவோ பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார் கவுரவ் கில். அதில் அவர் கூறியிருப்பதாவது," கடந்த நான்கு வாரங்கள் எனது வாழ்க்கையின் மிக மோசமான தருணமாக அமைந்துள்ளது. அந்த சம்பவத்தை நினைத்து வாழ்நாள் முழுதும் அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

சம்பவம் நடந்தபோது ஏற்பாட்டாளர்கள் மற்றும் களத்தில் இருந்த மார்ஷல்கள் யாரும் உதவவில்லை. சம்பவம் குறித்து களத்தில் பாதுகாப்பில் இருந்த மார்ஷல்கள் உடனடியாக ஏற்பாட்டாளர்களுக்கு கூட போன் செய்யவில்லை. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஆம்புலன்ஸுக்கு உடனடியாக தகவல் அளிக்காததால், தாமதம் ஏற்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

களத்தில் பணியில் இருந்தவர்களுக்கு போட்டி குறித்து எந்த புரிதலும் இல்லை. அனுபவமும் இல்லை. அவர்கள் சர்வசாதாரணமாக நினைத்துக் கொண்டு பைக்கை அனுமதித்துள்ளதாக கருதுகிறேன். ஆனால், இந்த போட்டியின்போது கார்கள் 150 கிமீ வேகத்திற்கு மேல் வரும் என்பது கூட தெரியாமல் இருந்துள்ளனர்.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

ஒரு திருப்பத்தில் செல்லும்போது தடத்தின் மையப்பகுதியில் ஒரு பைக் திடீரென வந்துவிட்டது. அப்போது கார் 165 கிமீ வேகத்தில் சென்றதாக நினைக்கிறேன். நான் சுதாரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் காரின் நடுப்பகுயில் பைக் மோதி, வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அந்த பைக் எனது எதிர் திசையில் இருந்து வந்ததாகத்தான் கருதுகிறேன். மிக குறுகலான அந்த தடத்தில் காரை திருப்புவதற்கும் அல்லது பிரேக் போடுவதற்கும் எந்த வாய்ப்பும் இல்லை. கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

சம்பவம் நடந்தவுடன் ஏற்பாட்டாளர் மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், மஹிந்திரா அட்வென்ச்சர் பிரிவு தலைவர் பிஜாய் மற்றும் ஜேகே டயர்ஸ் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு தலைவர் சஞ்சய் ஷர்மா ஆகியோர் மட்டுமே எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

ஏற்பாடு செய்தவர் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு போய்விட்டார். எனது சொந்த முயற்சியில் வழக்கறிஞரை நியமித்து இந்த விபத்து வழக்கை கையாண்டு வருகிறேன். விபத்து நடந்த முதல் நாள் முதலே போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். உள்நோக்கத்தோடு விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்ற பிரிவின்படி விசாரணை நடக்கிறது. விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இதற்கு ஏற்பாட்டாளர்கள் முழுமையான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஏற்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி, தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பு சார்பில் எந்த உதவியும், ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என கவுரவ் கில் வெளிப்படையாக பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்பாட்டாளர்கள் எஸ்கேப்... ஜோத்பூர் ராலி விபத்து குறித்து கவுரவ் கில் ஆதங்கம்!

கவுரவ் கில் மற்றும் அவரது வழிகாட்டியாக செயல்பட்ட மூசா ஷெரீப் ஆகியோருக்கு நேற்றுதான் ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வண்ணம், போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இது நிச்சயம் இந்திய மோட்டார் பந்தய உலகின் கருப்பு பக்கமாக அமைந்துவிட்டது.

Most Read Articles
English summary
Ace Indian rally driver and Arjuna awardee Gaurav Gill have slammed Jodhpur Rally Organizer and Federation for the unexpected accident, which kills 3 villagers.
Story first published: Friday, October 25, 2019, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X