ரேஞ்ச் ரோவர் இவோக் விலையில் ரூ.8 லட்சம் குறைப்பு: எதற்கு தெரியுமா...?
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான ரேஞ்ட் ரோவர் இவோக்கின் விலையில் ரூ. 8 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், தனது எஸ்யூவி ரக ரேஞ்ச் ரோவர் எவோக் மாடலை விற்பனைக்காக இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், மேற்கூரையை மூடித் திறக்கும் வகையில் (கன்வர்ட்டிபிள்) அப்கிரேட் செய்யப்பட்ட இவோக் மாடலை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆகையால், தற்போது இந்தியாவில் கன்வர்டிபிள் எனப்படும் எச்எஸ்இ டைனமிக் வேரியண்ட் மட்டும்தான் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த உலகப் புகழ் வாய்ந்த எஸ்யூவி மாடலை இந்தியாவில் ரூ. 69.53 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகிறது. இந்நிலையில், 180 கிமீ மட்டுமே பயணித்த பதிவுச் செய்யப்படாத புதிய இவோக் காரினை ரூ. 8 லட்சம் குறைத்து யூஸ்டு கார் டீலர் நிறுவனம் ஒன்று விற்பனைக்கு அறிவித்திருப்பதாக ரஷ்லேன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிக் பாய் டாய்ஸ் எனப்படும் இந்த யூஸ்டு கார் நிறுவனம், ஷோரூமில் நீண்ட நாளாக விற்பனையாகமல் இருந்த ரேஞ்ச் ரோவர் இவோக் காரை லேண்ட் ரோவர் டீலரிடம் வாங்கியுள்ளது. இதன் பின்னரே, இந்த கார்மீது இந்தளவிற்கான விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ஆகையால் இந்த லக்சூரி கார் ரூ. 62 லட்சம் என்ற விலையில் கிடைக்கும்.

லேண்ட் ரோவர் பிராண்டில் வெளிவந்துள்ள இந்த ரேஞ்ச் ரோவர் எவோக் கார் எஸ்யூவி ரகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் பத்து கார்களில் ஒன்றாகும். இதற்கு, இந்த காரில் உள்ள சொகுசு மற்றும் பாதுகாப்ப வசதிகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

அந்த வகையில், 12 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி வியூக் கொண்ட கேமிரா, ஆடோமேடிக் வைபர்ஸ், ஆடோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், டெர்ரயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் ரியர் பார்க்கிங் கேமிரா, டயர் பிரஸ்ஸர் மானிட்டரிங்க சிஸ்டம், டிரைலர் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட், ரோல் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், மற்றும் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வகையில் முன்பக்க இருக்கைககள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் கன்வர்டிபிள் மேற்கூரையானது, 21 செகண்டில் இருந்து 18 செகண்டிற்குள்ளாகவே மூடி திறக்கும். இந்த கன்வர்டிபிள் மேற்கூரையினால் 73 லிட்டர் பூட் ஸ்பேஸ் 251 லிட்டராக மாறிவிடுகிறது.

ரேஞ்ச் ரோவரின் இந்த இவோக் எஸ்யூவி காரில் 2.0 லிட்டருடைய நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 241 பிஎஸ் பவர் மற்றும் 340 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இதில் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்மிஸ்ஸன் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த காரில் அனைத்து வீல்களுக்கும் சுழலும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார், 0-100 என்ற வேகத்தை 8.1 விநாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, இது அதிகபட்சமாக 217 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.


Click it and Unblock the Notifications








