விற்பனைக்கு வந்த ரத்தன் டாடா பயன்படுத்திய பொக்கிஷ கார்... எவ்வளவு என தெரியுமா..?
ரத்தன் டாடா பயன்படுத்திய கார் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்குறித்த சிறப்பு தகவலையும், அதன் தற்போதைய விலைகுறித்த தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா, இந்தியாவின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பிரபலமான ஓர் நபராக உள்ளார்.

இவர் உலகளவில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆட்டோமொபைல்துறைதான். ஆனால், இவர் ஆட்டோமொபைல் மட்டுமின்றி டாடா உப்பு, டாடா இரும்பு, டாடா தேநீர், டாடா மென்பொருள் என அனைத்துத்துறைகளிலும் சதம் அடித்து வருகின்றார்.
முன்னதாக இந்திய அளவில் மட்டுமே கொடிக் கட்டிப் பறந்து வந்த டாடா மோட்டார்ஸ், ரத்தன் டாடா பொறுப்பேற்றதற்கு பின்னர், உலகளவில் கால் தடத்தை பதிக்க ஆரம்பித்தது.

இதைத்தொடர்ந்து, அவர் சென்ற இடமெல்லாமல் சிறப்புக்கு பஞ்சமின்றி காணப்பட்டது. அதற்கேற்ப வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட உலக தரம் வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் டாடா நிறுவனம் 5-வது இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்தமாக உலகத்தில் 2,000 நிறுவனங்களில் 31வது இடத்தைப் பிடித்துள்ளது.

டாடா நிறுவனத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தினால், அது தற்போது உச்சத்தில் உள்ளது. இதற்கு அவர் தொழில்மீது வைத்துள்ள பக்தியும், காதலும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், ரத்தன் டாடா ஓர் மிகப்பெரிய வாகன விரும்பியாக இருக்கின்றார். அந்தவகையில், அவர் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய ப்யூக் ஸ்கைலார்க் செடான் ரக கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்குறித்த தகவலை கீழே காணலாம்.

இந்த கார் 1978ம் ஆண்டு மாடல் ஆகும். இந்த காரை இந்தியாவிலேயே ரத்தன் டாடாதான் முதல் முறையாக வாங்கினார். இந்த கார் மேற்கத்திய மக்களுக்காக தயாரிக்கப்பட்டதால், இதன் ஸ்டியரிங் வீல் வலது பக்கத்தில் காட்சியளிக்கின்றது. இந்த காரின் தற்போதைய விலை ரூ. 14 லட்சம் என பேஸ்புக் பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அதிகபட்ச விலை, கார் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்கின்றது. இதனை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், கார் வாங்கியபோது எந்த நிறத்தில் இருந்தததோ அதே நிறத்தில்தான் தற்போது வரை காட்சியளிக்கின்றது. இது, அந்த காரின் தற்போதைய பராமரிக்கும் விதத்தை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கின்றது. அதேசமயம், காரின் பெயிண்ட் மட்டுமின்றி அதில் இருந்த பேட்ஜ் மற்றும் லோகோ ஸ்டிக்கர்களும் அப்படியே புத்தம் புதிதாக காட்சியளிக்கின்றது. இத்துடன், சிறு கோடு கூட இல்லாமல் அந்த கார் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து, காரின் உட்புறமும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், ப்யூக் ஸ்கைலார்க் எந்த சிறப்பம்சத்தில் விற்கப்பட்டதோ அதே சிறப்பம்சத்துடன்தான் தற்போதுவரை காட்சியளிக்கின்றது.
இருப்பினும், அதன் அலாய்வீல்கள் மற்றும் மாற்றப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல் காருக்கு தனித்துவமான பார்வை தோற்றத்தை வழங்குகின்றது. இந்த கார் ரத்தன் டாடாவிற்கு கொடுக்கப்பட்ட அதே பதிவெண் MMH 7474-லேயே காட்சியளிக்கின்றது.

ப்யூக் ஸ்கைலார்க் கார் சற்று ஸ்பெஷல் மாடலாக தயாரிக்கப்பட்ட ஒன்று. ஆகையால், அதில் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 1978ஆம் ஆண்டிலேயே 1,14,220 யூனிட்டுக்கும் அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பெரும்பாலான கார்களுக்கு வி6 தரத்திலான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டன. இதில், வெறும் 17,116 யூனிட்டுகளுக்கு மட்டும் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டன.
அதில் ஒன்றுதான் இந்தியாவின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிற்கு விற்கப்பட்டது. இந்த கார்தான் தற்போது வேறொரு நபர் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

அதேசமயம், வி8 எஞ்ஜினில் மூன்று விதமான தேர்வு கிடைக்கின்றது. அவ்வாறு, 5.0 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கும் கார் 145 பிஎச்பி பவரையும், 332 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, 5.8 லிட்டர் அளவு கொண்ட வி8 எஞ்ஜின் 155 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தொடர்ந்து, 5.7 லிட்டர் அளவில் உள்ள வி8 எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 373 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ரத்தன் டாடா இந்த கார் மட்டுமின்றி பல்வேறு சொகுசு கார்களைப் பயன்படுத்தியுள்ளார். அந்தவகையில், ஃபெர்ராரி கலிஃபோர்னியா, மெர்சிடிஸ் பென்ஸ் 500 எஸ்எல், லேண்ட் ரோவர் ஃப்ரீ லேண்டர், மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ124, கடிலோக் எக்ஸ்எல்ஆர், கிரிஸ்லர் செப்ரிங், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் ப்யூக் சூப்பர் 8 உள்ளிட்ட கார்களை அவர் வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, அவரின் சொந்த தயாரிப்புகளில் ஒன்றான டாடா நெக்ஸான் மற்றும் ஹோண்டா சிவிக் உள்ளிட்ட கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். தற்போது விற்பனைக்கு வந்துள்ள ரத்தன் டாடாவின் ப்யூக் ஸ்கைலார்க் காரின் தற்போதைய உரிமையாளர் யார்... அவர் எப்போது டாடாவிடம் இருந்து இந்த காரை வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், தற்போதைய விற்பனையாளரை தொடர்பு இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








