ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆட்டோமொபைல் துறை தற்போது கதிகலங்கி போய் நிற்கிறது. பல லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளது. இதன் பின்னணியில் உள்ள 8 உண்மையான காரணங்களை யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நடப்பு 2019ம் வருடம் மிக மோசமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டை தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக மறக்கவே மாட்டார்கள். ஆட்டோமொபைல் துறை நடப்பு ஆண்டில் அந்த அளவிற்கு பெருத்த அடியை வாங்கி கொண்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மிக கடுமையாக சரிவடைந்து கொண்டே செல்கிறது. எனவே வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து கொண்டே வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் துறையை சார்ந்து இயங்கி வரும் லட்சக்கணக்கானோரின் வேலை தொடர்ச்சியாக பறிபோய் வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 3.50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 200க்கும் மேற்பட்ட வாகன டீலர்ஷிப்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்கலாம் எனவும், இன்னும் ஏராளமான டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்படலாம் எனவும் அபாய சங்கு ஊதப்பட்டு வருகிறது. இப்பேர்பட்ட கடுமையான சரிவில் இருந்து மீண்டு வர வேண்டுமென்றால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவ வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு தற்போது வரை ஜிஎஸ்டியை குறைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை உடனடியாக சரிவில் இருந்து மீள்வதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆட்டோமொபைல் துறை இந்த அளவிற்கு மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருப்பது ஏன்? என சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்களில் தற்போது அனல் பறக்க விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், முக்கியமான காரணங்களை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

பிஎஸ்-6 விதிகள் ஏற்படுத்தியுள்ள பெரும் குழப்பம்

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணையானவை. இந்த சூழலில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வரவுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

எனவே அனைத்து வாகன நிறுவனங்களும் தங்கள் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். பிஎஸ்-6 விதிமுறைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன. பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வர இன்னும் சில மாதங்களே இருப்பதால், புதிய வாகனங்களை வாங்குவதை அவர்கள் தற்போதைக்கு தள்ளிப்போட்டு வருகின்றனர்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

அதேபோல் பிஎஸ்-6 தர நிலை கொண்ட எரிபொருள் நாடு முழுவதும் கிடைப்பது தொடர்பாகவும் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆனால் டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு முதலே பிஎஸ்-6 எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்-4 கார்கள் இந்த எரிபொருளில் இயங்கினால் அவற்றுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

டீசல் கார்களை வாங்க தயக்கம்

பெட்ரோல் இன்ஜினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு குறைவான முதலீடுதான் தேவைப்படும். ஆனால் டீசல் இன்ஜினை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கு அதிகம் செலவு ஆகும். அந்த சுமையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் விலை உயர்வு என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்தவுள்ளன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

உதாரணத்திற்கு பிஎஸ்-6 விதிகளால், டீசல் கார்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயரவுள்ளன. இவ்வளவு மிக கடுமையான விலை உயர்வை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தினால், விற்பனை அவ்வளவு சிறப்பாக இருக்காது எனவும் சில நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விட அவை முடிவு செய்துள்ளன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு ஒரு உதாரணம். டீசல் இன்ஜின் கார்களை நிறுத்து விடுவது என்பதுதான் மாருதி சுஸுகியின் முடிவாக உள்ளது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் டீசல் இன்ஜின் கார்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. எனினும் இதில் உள்ள சில நிச்சயமற்ற தன்மைகளால் டீசல் கார்களை வாங்குவதில் மக்களுக்கு தயக்கம் உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

அட்டகாசமான சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் அனேகமாக உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போதுதான் பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்டன. அந்த சமயத்தில் கையில் இருக்கும் சரக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக, அதிரடி விலை குறைப்பு உள்பட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இதேபோன்றதொரு சூழல், பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வரும் சமயத்தில் ஏற்படலாம். அதாவது பிஎஸ்-6 விதி அமலுக்கு வரும் சமயத்தில், பல்வேறு சலுகைகள் அள்ளி வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்காகவும் ஏராளமான வாடிக்கையாளர்கள், புதிய வாகனங்களை வாங்குவதை தள்ளி போட்டு கொண்டுள்ளனர்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

லோன் வாங்குவது மிக கடினம்

இந்தியாவில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழல் காரணமாக, வாகனங்களுக்கு லோன் அளிப்பதில் வங்கிகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வங்கிகள் லோன் வழங்குகின்றன. எனவே வாகனங்களுக்கு வங்கி மூலம் கடன் வாங்குவது என்பது தற்போதைய நிலையில் குதிரை கொம்பாக உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

டீலர்ஷிப்களை நடத்தி வருபவர்களிடமும் கூட வங்கிகள் இதே பாணியைதான் கடைபிடித்து வருகின்றன. வங்கி லோன் பெறுவதில் உள்ள பல்வேறு சிரமங்கள் காரணமாக அவர்களால் தொழிலை சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வரும் இக்கட்டான நேரத்தில், இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கி கொண்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஓலா, உபேர் ஏற்படுத்திய தாக்கம்

முன்பெல்லாம் வாகனம் இல்லாத சூழலில் ஓரிடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஆட்டோவையோ அல்லது ரிக்ஸாவையோ பிடிக்க வேண்டியது இருக்கும். அவசர சூழல்களில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களை எளிதாக கண்டறியவும் முடியாது. அத்துடன் அவர்கள் கேட்கும் கட்டணமும் மிக அதிகமாக இருக்கும். இதில், வரைமுறையே இல்லாத சூழல் இருந்தது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆனால் செல்போன் ஆப் சார்ந்து செயல்படும் ஓலா மற்றும் உபேர் போன்ற கேப் நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சியை தற்போது சந்தித்து வருகின்றன. மலிவான கட்டணத்தில் கிடைக்கும் இணையம் மூலமாக அவற்றை பயன்படுத்துவதும் மிக எளிதாக உள்ளது. அத்துடன் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணமும் கொஞ்சம் நியாயமாகவே உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

குறைவான தூரம் மட்டும் செல்வதாக இருந்தாலும் கூட உங்களால் ஓலா, உபேர் சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். ஓலா, உபேர் டிரைவர்களால் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்தாலும் கூட, மற்றபடி அவர்களின் சேவை சிறப்பாகவே உள்ளது. இப்படி ஒரு வசதி இருக்க சொந்த வாகனத்திற்கு வீண் செலவு எதற்கு? எனவும் பலர் நினைக்கின்றனர்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

போக்குவரத்து நெரிசல்

சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களிலும் கூட தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த வலி நன்கு புரியும். சொந்தமாக கார் வாங்குவது என முடிவெடுத்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைதான் முதலில் நினைவிற்கு வருகிறது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

உங்களிடம் சொந்தமாக கார் இருந்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளில் அதனை ஓட்டுவதற்கே நீங்கள் அதிகமான நேரத்தை செலவிட வேண்டியதிருக்கும். இது உங்களுடைய ஆற்றலை வீணாக்குவதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். அதற்கு பதிலாக ஓலா, உபேர் பெஸ்ட் என ஏராளமானோர் நினைக்க தொடங்கி விட்டனர்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

தினந்தோறும் நீங்கள் ஒரே வழி தடத்தில் பயணிப்பவர் என்றால், அதாவது அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவர் என்றால் ஓலா, உபேர் உங்களுக்கு நல்ல சாய்ஸ். ஹாயாக சென்று வரலாம். உங்கள் ஆற்றல் சேமிக்கப்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்படாது. அதே குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால், வாடகைக்கு கார்கள் கிடைக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

வாடகை கட்டணத்தை செலுத்தி விட்டு நீங்களே காரை ஓட்டி சென்று வரலாம். எனவே சொந்த கார்களுக்கான அவசியம் குறைந்து வருகிறது என்பதுதான் தற்போதைய யதார்த்த நிலை. உண்மையை சொல்வதென்றால், சொந்த கார் வைத்திருப்பது தற்போது ஒரு தொல்லையாகதான் பார்க்கப்படுகிறது. கார் நிறுவனங்கள் குறி வைப்பதில், இளம் தலைமுறையினரும், தொழில் முனைவோரும் முக்கியமானவர்கள்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆனால் ஆற்றல் இழப்பு, மன உளைச்சல் மற்றும் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் சொந்தமாக கார் வைத்திருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. அதற்கு பதில் மிகவும் சிக்கனமான அதே சமயம் மிகவும் சௌகரியமான ஓலா மற்றும் உபேர் போன்றவைதான் அவர்களின் சாய்ஸ் ஆக உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆட்டோமொபைல் துறையில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்

மத்திய அரசு பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து புதிய வாகனங்களும் இந்த விதிமுறைகளுக்கு இணங்கியாக வேண்டும். 125 சிசிக்கும் மேற்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற உத்தரவு இதற்கு ஓர் உதாரணம்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

இதுதவிர இன்சூரன்ஸ் பிரீமியமும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. அத்துடன் அனைவருக்கும் தேவையானதும் கூட. ஆனால் இதன் காரணமாக வாகனங்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே புதிய வாகனங்களை மக்களால் அவ்வளவு எளிதாக வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கிய தாக்கம்

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய பேச்சு அதிகம் அடிபடுகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி சமீபத்தில் குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

எனவே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனத்தில் முதலீடு செய்வதா? அல்லது எலெக்ட்ரிக் வாகனத்தில் முதலீடு செய்வதா? என வாடிக்கையாளர்கள் மிகவும் குழம்பி போய் உள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போதுதான் தலையெடுக்க தொடங்கியுள்ளன. அவற்றின் ரேஞ்ச் அவ்வளவு பிரமாதமாக இல்லை.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைவான தூரம் மட்டுமே பயணிக்க முடியும். இதில், ஹூண்டாய் கோனா மட்டும் விதிவிலக்கு. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 452 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். மற்ற வாகனங்கள் மிகவும் குறைவான ரேஞ்சைதான் கொண்டுள்ளன.

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆனால் வரும் காலங்களில் அதிக ரேஞ்ச் கொண்ட அதே சமயம் ஓரளவிற்கு குறைவான விலையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. எனவே அதற்காகவும் ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்து கொண்டுள்ளனர். ஒரே முதலீடாக எலெக்ட்ரிக் வாகனத்தில் செய்து விடலாம் என்பதும் பலரின் எண்ணமாக உள்ளது.

Most Read Articles
English summary
Real Reasons Behind Automobile Industry Slowdown. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X