வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.12.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த வேரியண்ட் தற்போது ரூ.10.86 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு டீலர்ளில் ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

கடந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிகள் டீலர்களில் இருப்பில் தேங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிஸான் கிக்ஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட புதிய எஸ்யூவி மாடல்களின் வருகை ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ஐளது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

இதனையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சில டீலர்களில் ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விலையில் தள்ளுபடி தவிர்த்து இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.12.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த வேரியண்ட் தற்போது ரூ.10.86 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது, பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1.37 லட்சம் வரை சேமிப்பு வழங்கப்படுகிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

அதேபோன்று, பிளாட்டீன் டியூவல் டோன் என்ற டாப் வேரியண்ட் ரூ.17.16 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட் தற்போது ரூ.14.58 லட்சம் விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ரூ.2.58 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் வர இருக்கிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியானது 210 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கிறது. இதனால், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற மாடலாக கருதப்படுகிறது.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

வேற வழி... ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கேப்ச்சர் விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சேமிப்பு சலுகைகள் மூலமாக விற்பனை எண்ணிக்கையைில் சற்று ஏற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ரெனோ டீலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Thursday, January 17, 2019, 11:05 [IST]
English summary
Renault dealerships have started offering dealer-level discounts and other incentives for the Captur SUV in India. The Renault Captur MY2018 units now come with discounts worth more than Rs 2.50 lakh.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+