க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

இந்தியாவில் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ரெனோ கார் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்திய கார் வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து பார்த்து, புதிய கார்களை களமிறக்கி வருகிறது. க்விட், ட்ரைபர் மினி எம்பிவி என அந்நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கிய கார்கள் ஹிட் அடித்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் இந்த கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

இந்த நிலையில், அடுத்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ளது. இதனை ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலப்பல்லே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது HBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. க்விட், ட்ரைபர் கார்களை போன்று வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும்.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

புதிய ரெனோ மினி எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு திறனுக்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

ரெனோ ட்ரைபர் கார் 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை கொண்ட மினி எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு நிலையில், புதிய மினி எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும். இதனால், போதுமான இடவசதியை அளிக்கும்.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஹோண்டா டபிள்யூஆர்வி உள்ளிட்ட எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டாலும், இந்த கார் விலை குறைவான தேர்வாக இருக்கும் என்பதால், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட்டுகள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் என ஏராளமான ஆக்சஸெரீகளுடன் எஸ்யூவி பிரியர்களின் எதிர்பார்ப்புகளை சுண்டி இழுக்கும். இந்த எஸ்யூவி 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த மாடலாக களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

க்விட், ட்ரைபர் வரிசையில் அசத்தலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

புதிய ரெனோ எஸ்யூவி ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இது நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்க்கும் அத்துனை விஷயங்களையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. விரைவில் இந்த எஸ்யூவி குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. எக்கனாமிக் ஆட்டோ தளம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2019, 16:12 [IST]
English summary
According to media report, Renault is planning to launch new compact SUV in India by next year.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+