ரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு!

ரெனோ க்விட் கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய மின்சார கார் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் மாடலானது K-ZE என்ற பெயரில் சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மோட்டார் ஷோவின் மூலமாக பொதுபார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ க்விட் கார் போன்றே காட்சி தருகிறது. இருப்பினும், க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

இரட்டை அமைப்புடைய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் க்விட் காரை வெகுவாக ஒத்துப்போகிறது. பெரிய அளவிலான மாற்றங்களை குறிப்பிட்டு சொல்லமுடியாது. நான்கு வீல் போல்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம்.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வழியாக காரின் இயக்கம், நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். இந்த காரில் 4ஜி வைஃபை, வாய்ஸ் கமாண்ட் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற இருக்கின்றன.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

புதிய ரெனோ K-ZE எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சாதாரண 220V சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்கும். குயிக் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நடைமுறையில் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, தினசரி அலுவலகப் பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த மாடலாக இருக்கும். அத்துடன், மின்சார கார் மார்க்கெட்டின் ஆரம்ப விலை கொண்ட பட்ஜெட் மாடலாகவும் வர இருக்கிறது.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

சீனாவை சேர்ந்த டாங்ஃபெங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை ரெனோ- நிஸான்- மிட்சுபிஷி கூட்டணி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.

ரெனோ க்விட் அடிப்படையிலான மின்சார கார் வெளியீடு!

இந்த கார் 2,423 மிமீ வீல் பேஸ் நீளம் மற்றும் 300 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் போன்ற பொதுவான அம்சங்களை பெற்றிருக்கிறது. பெட்ரோல் மாடலைவிட மின்சார மாடலின் வீல்பேஸ் 1 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளை, ரெனோ க்விட் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக உள்ள நிலையில், இந்த மின்சார மாடலின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் வெறும் 150 மிமீ ஆக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2019, 13:29 [IST]
English summary
Renault Kwid-based City K-ZE Electric Car Revealed in China.
மேலும்... #ரினால்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+