நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

பல்வேறு அட்டகாசமான வசதிகளுடன் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

ஆனால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பல்வேறு தடைக்கற்கள் உள்ளன. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறைவாக உள்ளது. அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம் குறைவாக இருக்கிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுதவிர இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவில்லை.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதில், எலெக்ட்ரிக் கார்கள் என எடுத்து கொண்டால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இது உண்மையில் சிறப்பான விஷயம்தான். ஆனால் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 23.72 லட்ச ரூபாய். இது அதிகமான விலை என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதாவது ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

அதன்பின்புதான் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்த விலைக்கு வந்தது. அதற்கு முன்பு அதன் விலை 25.30 லட்ச ரூபாயாக இருந்தது. இதுதவிர டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி என இரண்டு வேரியண்ட்களில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இதில், எக்ஸ்எம் வேரியண்ட்டின் விலை 11.58 லட்ச ரூபாய். அதே சமயம் எக்ஸ்டி வேரியண்ட்டின் விலை 11.92 லட்ச ரூபாய். இதுவும் கூட ஜிஎஸ்டி குறைப்பிற்கான பிந்தைய விலைதான். இது ஓரளவிற்கு குறைவான விலையாக இருந்தாலும் கூட, இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இதுதவிர டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கான பணமும், விருப்பமும் உங்களிடம் இருந்தால் கூட தற்போதைக்கு அதனை உங்களால் வாங்க முடியாது. ஏனெனில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் வாடகை கார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இன்னும் கொண்டு வரப்படவில்லை. எனவே நடைமுறைக்கு பயன்பாட்டிற்கும் உகந்த அதே சமயம் ஓரளவிற்கு குறைவான விலையிலும் வாங்க கூடிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எதுவும் தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் இல்லை.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

எனவே மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்தான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடல். இது அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

12 லட்ச ரூபாய் என்ற விலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு தகவல் இந்த காருக்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆம், இதுவும் டாடா டிகோர் போல் ஆரம்பத்தில் வாடகை கார் நிறுவனங்கள், அரசு துறைகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

அதாவது ஆரம்பத்தில் தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு கொண்டு வரப்படாது. சில காலம் கழித்துதான் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடைமுறை பயன்பாட்டிற்கும் உகந்த அதே சமயம் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை ரெனால்ட் நிறுவனம் களமிறக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் க்விட், டஸ்டர் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், க்விட் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை தொடங்கி விட்டதாக அவர் கூறினார். இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை ரெனால்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

ரெனால்ட் க்விட் காரின் எலெக்ட்ரிக் மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் செட் அப் உடன் ரெனால்ட் க்விட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக இந்த காரின் பேட்டரிகளை, வெறும் 50 நிமிடத்தில் 80 சதவீதம் அளவிற்கு சார்ஜ் செய்து விட முடியும்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

ரெனால்ட் நிறுவனத்தின் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்படும் என தெரிகிறது. தோற்றத்தில் பார்ப்பதற்கு க்விட் காரின் பெட்ரோல் மாடலை போலவே இது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன் புதிய 8 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

இதில், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என்பதால், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அத்துடன் இதன் விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாகதான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

250 கிலோ மீட்டர்கள் என்ற சிறப்பான ரேஞ்ச், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை உள்ளிட்ட காரணங்களால் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் முதலில் சீனாவில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

அதன்பின்புதான் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். சீனாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவை காட்டிலும் மிக சிறப்பாக உள்ளன. ஆனால் இந்தியாவில் அந்த அளவிற்கு இன்னும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படவில்லை.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

எனினும் வரும் காலங்களில் இந்த பிரச்னையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இல்லையென்றால், விற்பனை அவ்வளவு பிரமாதமாக இருக்காது என்பதை ரெனால்ட் நிறுவனம் நன்றாக உணர்ந்துள்ளது.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா? வசதிகளும் அசத்தல்

எனவேதான் க்விட் எலெக்ட்ரிக் காரை முதலில் அந்நிறுவனம் சீனாவில் களமிறக்குகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்களுக்கு ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source:ET Auto

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Electric Coming Soon To India: Expected To Be Priced Under Rs 10 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X