நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் நம்ப முடியாத மிக குறைவான விலையில் சீனாவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியாவிலும் இந்த கார் லான்ச் ஆகவுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. எனவே ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கம் எதிரொலியால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்குவதில் ஆர்வமாக உள்ளது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் களமிறக்கிய கோனா எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ஆனால் அதன் அதிகப்படியான விலை வாடிக்கையாளர்களை பின்வாங்க வைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது தொடர்பான தனது திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கவுள்ளதாக ரெனால்ட் தெரிவித்தது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு சீனாவில்தான் க்விட் எலெக்ட்ரிக் கார் முதலில் லான்ச் செய்யப்படும் எனவும் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அதன் விற்பனை சிறப்பாக இருக்காது என்பதை ரெனால்ட் நிறுவனம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தபடி, க்விட் எலெக்ட்ரிக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் சிட்டி கே-இஸட்இ (City K-ZE) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

சிட்டி கே-இஸட்இ எலெக்ட்ரிக் காரில், 26.8kWh லித்தியம் இயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 43.3 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த கார் சிஎம்எஃப்-ஏ (CMF-A) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் க்விட் காரும் கூட இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

எனினும் எலெக்ட்ரிக் காருக்கு ஏற்ப ஒரு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் கொஞ்சம் குறையலாம். என்றாலும் இது சிறப்பான ரேஞ்ச் ஆகவே பார்க்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகும். அதே சமயம் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 30 நிமிடங்களில், 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இதன் இன்டீரியரில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

இதில், 4ஜி வைபை கனெக்டிவிட்டி, ஆன்லைன் மியூசிக் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 61,800 யுவான்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக வெறும் 6.22 லட்ச ரூபாய்தான். க்விட் எலெக்ட்ரிக் கார் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

சீனாவில் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த கார் வரும் 2022ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Electric Launched In China- India Launch Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X