ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காருக்கு காப்புரிமை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட படங்கள் இணையதளம் மூலமாக கசிந்துள்ளன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் மோட்டார் ஷோவில் ரெனோ க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட K- ZE என்ற எலெக்ட்ரிக் கார் மாடலின் கான்செப்ட்டை ரெனோ கார் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலை வர்த்தக ரீதியில் களமிறக்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

இந்த நிலையில், ரெனோ க்விட் அடிப்படையிலான இந்த புதிய எலெக்ட்ரிக் காரை காப்புரிமை பெறுவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட படங்கள் பிட்ஆட்டோ என்ற இணையதளத்தில் வெளியிடப்படப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்ப்டடுள்ளன. இரட்டை வண்ண பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. வீல் ஆர்ச்சுகள் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளன. புதிய அலாய் வீல்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை வண்ண பின்புற பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

சீனாவை சேர்ந்த டாங்ஃபெங் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இஜிடி நியூ எனெர்ஜி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கான கியர்பாக்ஸ், மின் மோட்டார் உள்ளிட்டவற்றை ரெனோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

இந்த காரின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல் இல்லை. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று ரெனோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

புதிய ரெனோ க்விட் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சீனாவின் ஷியான் பகுதியில் உள்ள டாங்ஃபெங் கார் ஆலையில் இந்த புதிய ரெனோ க்விட் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் வெளியானது!

வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் மின்சார கார்களுக்கான கட்டமைப்பு போதிய அளவில் இல்லாததே, தாமதத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Source: Bitauto

Most Read Articles
மேலும்... #ரெனால்ட்
English summary
Renault Kwid Electric patent images leaked.
Story first published: Monday, February 25, 2019, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X