ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

ரெனோ க்விட் காரின் மின்சார மாடல் வரும் 16ந் தேதி முதல்முறையாக உலக அளவில் பொது பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பட்ஜெட் கார் மாடலாக ரெனோ க்விட் வலம் வருகிறது. இந்த நிலையில், ரெனோ க்விட் அடிப்படையில் புதிய மின்சார கார் மாடலை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

சீன கூட்டாளியான டாங்ஃபெங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய மின்சார கார் மாடலை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த கார் ரெனோ நிறுவனத்தின் K-ZE என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்லது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

டாடா ஹாரியர், ஹூண்டாய் வெனியூ கார்கள் போன்ற ஹெட்லைட் அமைப்பு சற்று இறக்கமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மேற்புறத்தில் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பது இதுவரை வெளியான ஸ்பை படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. .

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

பின்புறத்திலும் பல புதிய மாற்றங்களுடன் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும் பின்புறத்தின் முக்கிய டிசைன் அம்சமாக கருதப்படுகிறது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

புதிய ரெனோ க்விட் மின்சார காருக்கான மின்மோட்டார்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றை டாங்ஃபெங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ரெனோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த கார் முழுமையான சார்ஜுக்கு பின்னர் 250 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிகிறது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

இந்த புதிய மாடல் வரும் 16ந் தேதி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் முதல்முறையாக பொது பார்வைக்கு வர இருக்கிறது. அதன் பின்னர், உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் மின்சார கார் மாடல் அறிமுக விபரம்!

இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அங்கிருந்து சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும். இந்தியாவில், இதன் அடிப்படையிலான மின்சார மாடல் ஓரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவான மின்சார மாடலாக இருக்கும் என்பதால் ஆவலை தூண்டி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2019, 17:50 [IST]
English summary
Renault Kwid EV To Be Unveiled On 2019 Shangai Motor show.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+