மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் விலைக் கொண்ட ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் ரக காருக்கான அக்ஸசெரீஸ்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பிரபல ரெனால்ட் நிறுவனம், அதன் மலிவு விலை காரான புதுப்பிக்கப்பட்ட க்விட் மாடலுக்கு தேவையான அகஸசெரீஸ்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் விற்பனை வீழ்ச்சியைக் குறைக்கும் விதமாக ரெனால்ட் நிறுவனம், அதன் க்விட் காரை புதுப்பித்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டது. அதன்படி, நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில் புத்துணர்வு அளிக்கப்பட்ட க்விட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

இந்த காரில் புது அப்டேட்டாக கூடுதல் தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், க்விட் காருக்கு புத்தம் புதிய முகப்பு பகுதி, ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், சி வடிவிலான எல்இடி பின் பகுதி மின் விளக்கு, டிராக்குகளுடன் கூடிய பூமராங் வடிவில் செதுக்கப்பட்ட ரூஃப் மற்றும் ஆர்ச் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

தொடர்ந்து, க்விட் காருக்கு 14 இன்ச் அளவு கொண்ட வால்கனோ க்ரே மல்டி ஸ்போக் வீல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், முந்தைய மாடல் க்விட்டைக் காட்டிலும், கூடுதல் வீல் பேஸ், உயரம், அகலம் மற்றும் நீளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 184 மிமீட்டராகவும், பூட் ஸ்பேஸ் 279 லிட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

இதேபோன்று, மேலும் பல கூடுதல் வசதிகள் புதிய க்விட் காரை அலங்கரித்துள்ளது.

இத்துடன், மேற்கூறிய அம்சங்கள் போதாதென்று க்விட் காரை கூடுதல் கவர்ச்சிப்படுத்தும் வகையில், ரெனோ நிறுவனம் இந்த பட்ஜெட் காருக்கான அக்ஸசெரீஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஐந்து அக்ஸசெரீஸ்கள் பேக்கேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

அந்தவகையில், ஏஎல்ஏ கர்டே பேக், எசென்ஸியல் பேக், எஸ்யூவி பேக், அர்பன் பேக் மற்றும் குரோம் பேக் ஆகியவற்றை அது அறிமுகம் செய்துள்ளது.

இந்த பேக்குகளில் என்னென்ன இருக்கின்றது என்பதுகுறித்த தகவலை வெளிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம், புதிய வீடியோ டீசர் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. ஆனால், விலை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

பட்ஜெட் ரக கார் விரும்பிகளை கவரும் வகையில், புதிய க்விட் காருக்கான விலை நிர்ணயித்துள்ளது. அந்தவகையில், க்விட்டின் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 2,83,290 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அதன் ஹை எண்ட் மாடலுக்கு ரூ. 4,84,490 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

க்விட் காரின் முழு விலை விவரப் பட்டியல்:

வேரியண்டுகள் விலை
எஸ்டிடி 0.8L ரூ. 2.83 லட்சம்
ஆர்எக்ஸ்இ 0.8L ரூ. 3.53 லட்சம்
ஆர்எக்ஸ்எல் 0.8L ரூ. 3.83 லட்சம்
ஆர்எக்ஸ்டி 0.8L ரூ. 4.13 லட்சம்
ஆர்எக்ஸ்டி 1.0L ரூ. 4.33 லட்சம்
ஆர்எக்ஸ்டி 1.0L ஈசி-ஆர் ரூ. 4.63 லட்சம்
க்ளிம்பர் எம்டி ரூ. 4.54 லட்சம்
க்ளிம்பர் ஈசி-ஆர் ரூ. 4.84லட்சம்
மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

க்விட்டின் விலை மலிவாக காணப்பட்டாலும், பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றது. அந்தவகையில், காரின் கேபினுக்குள் புத்தம் புதிய எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஃப்ளூர் கன்சோல் மவுண்டட் ஏஎம்டி டயல் மற்றும் 20.32 மீடியா என்ஏவி டச் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை, காருக்கு கூடுதல் பிரீமியம் லுக்கை வழங்குகின்றது.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

vபுதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ரெனோ க்விட் கார், தற்போது விற்பனையில் இருக்கும் க்விட் காரைப் போலவே இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஸ்சிஇ (SCe) மோட்டாரில் கிடைக்க உள்ளது. இவையிரண்டும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கின்றது.

மலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி!!!

இதில், 0.8 லிட்டர் அளவுடைய எஞ்ஜின் அதிகபட்சமாக 54 பிஎஸ் சக்தியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, 1.0 லிட்டரில் கிடைக்கும் எஞ்ஜின் அதிபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2019, 13:58 [IST]
English summary
Renault Kwid Facelift Accessories Details Revealed In New Video. Read In Tamil.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+