ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற ரெனோ க்விட் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அண்மையில் இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்த உணர்த்துவதற்கான டீசர்கள் வெளியிடப்பட்டன. ஸ்பை படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுகத்திற்கு மறுநாள், அதாவது வரும் அக்டோபர் 1ந் தேதி புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனோ க்விட் காரின் முகப்பில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிகளை போல பம்பரில் இணைந்த ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பானட்டை ஒட்டி இண்டிகேட்டர் மற்றும் பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் வசீகரமாக மாறி இருக்கிறது. தொடர்ந்து தன்னை நவீன யுக மாடலாக நிலைநிறுத்திக் கொள்ள இருக்கிறது ரெனோ க்விட்.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

உட்புறத்தில் பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஏசி வென்ட்டுகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது. ஏஎம்டி மாடலில் கியர் மோடுக்கான டயலும் இடம்மாற்றம் கண்டுள்ளது.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய ரெனோ க்விட் காரில் 54பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 799சிசி பெட்ரோல் எஞ்சினும், 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் தொடர்ந்து தக்க வைக்கப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.0 லிட்டர் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. புதிய ரெனோ க்விட் கார் விலை சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும். மாருதி எஸ் பிரெஸ்ஸோ, டாடா டியோகா உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2019, 14:41 [IST]
English summary
French car maker, Renault is all set to launch Kwid facelift model in India on October 1, 2019.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+