புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

புதிய மாடல்களை களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ரெனோ கார் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்த அந்நிறுவனம் அடுத்ததாக வரும் 28ந் தேதி ட்ரைபர் மினி எம்பிவி காரை அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

இதைத்தொடர்ந்து, அடுத்து புதுப்பொலிவுடன் கூடிய ரெனோ க்விட் காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் ரெனோ க்விட் கார் அதன் எஸ்யூவி போன்ற ஸ்டைலுக்காக பெயர் பெற்றிருக்கிறது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

இதனை இன்னமும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் மாற்றங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. இந்த புதிய மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள K-ZE என்ற க்விட் எலெக்ட்ரிக் காரின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்களுடன் புதிய க்விட் கார் வர இருக்கிறது. அதாவது, வெளிப்புற டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றிருக்கும்.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

அதேபோன்றே, உட்புறத்திலும் சில டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இதர அம்சங்களுடன் புதிய மாடல் வர இருக்கிறது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

புதிய ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது. இதில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

புதிய ரெனோ க்விட் காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு நுட்பத்துடன் வர இருக்கிறது.

புதிய ரெனோ க்விட் கார் அறிமுக விபரம் வெளியானது!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருவதால், புதிய ரெனோ க்விட் காரின் விலையும் அதிகரிக்கப்படும். டாடா டியாகோ, மாருதி ஆல்ட்டோ ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரெனோ க்விட் காரின் K-ZE என்ற எலெக்ட்ரிக் கார் மாடலானது வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Cartoq

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2019, 10:50 [IST]
English summary
According to media reports, Renault is planning to launch KWID facelift model in India by next month.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+