புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

ரூ.2.83 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை இந்தத செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

புதிய ரெனோ க்விட் கார் 800 சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது. 800 சிசி மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.0 லிட்டர் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். இந்த கார் விலை, கியர்பாக்ஸ் தேர்வு அடிப்படையில் ஸ்டான்டர்டு, ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி,க்ளிம்பர் ஆகிய 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

ஸ்டான்டர்டு

விலை: ரூ.2.83 லட்சம்

க்விட் காரை மதிப்பு வாய்ந்ததாக மாற்றும் விதத்தில், பேஸ் வேரியண்ட்டிலேயே அசத்தலான வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பட்டைகளுடன் கூடிய டெயில் லைட்டுகள், டாக்கோமீட்டருடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், எஞ்சின் இம்மொபைலைசர், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 14 அங்குல ஸ்டீல் வீல்கள் கருப்பு வண்ண வீல் கவர்கள் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

ஆர்எக்ஸ்இ (800 சிசி)

விலை: ரூ.3.53 லட்சம்

ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் இருக்கும் முக்கிய அம்சங்களுடன் கூடுதலாக, பாடீ டீக்கெல் ஸ்டிக்கர்கள், மேனுவல் ஏசி சிஸ்டம், மடக்கும் வசதியுடன் பின் இருக்கைகள், இரண்டு ஸ்பீக்கர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

ஆர்எக்ஸ்எல் (800 சிசி)

விலை: ரூ.3.83 லட்சம்

ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முழுமையான வீல் கவர்கள், 14 அங்குல ஸ்டீல் வீல்கள், பாடி கலர் பம்பர்கள், சிறப்பு வண்ணம் தீட்டப்பட்ட சைடு மிரர்கள்,பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், முன்புறத்திற்கான பவர் விண்டோ வசதி, யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் வசதியுடன் சிங்கிள் டின் ஆடியோ சிஸ்டம், 12 வோல்ட் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

ஆர்எக்ஸ்டி (800 சிசி மற்றும் 1.0 லிட்டர் )

விலை: ரூ.4.13 லட்சம் முதல் ரூ.4.63 லட்சம் வரை

இந்த விலை உயர்ந்த வேரியண்ட்டில் ரியர் பார்க்கிங் கேமரா, டியூவல் ஏர்பேக்குகள், முன்புற பனி விளக்குகள், க்ரோம் க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண பில்லர்கள்(1.0 லிட்டர் மாடலுக்கு மட்டும்), ரியர் பவர் விண்டோ வசதி, யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

க்ளிம்பர் (1.0 லிட்டர்)

விலை:

மேனுவல்: ரூ.4.54 லட்சம்

ஏஎம்டி: ரூ.4.84 லட்சம்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் ரெயில்கள், 14 அங்குல அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்டுகள், ஆரஞ்ச் வண்ண அலங்கார அம்சங்களுடன் பின் இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2019, 17:48 [IST]
English summary
Renault KWID Facelift model is available in a total of five variants including two engines and two gearbox options in India.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+