ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் கூடுதல் பாதுகாப்பு அம்சம்சங்கள் அறிமுகம்!
ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதற்காக கார்களில் பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கார் நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. அந்த வகையில், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் பேஸ் வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இனி ஆர்எக்ஸ்இ மற்றும் பிளாட்டீன் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

இந்த வேரியண்ட்டுகளில் இரண்டு ஏர்பேக்ககுகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட், அட்ஜெஸ்ட்டபிள் சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

தவிரவும், பின்புற விண்ட்ஷீல்டுக்கான டீஃபாகர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. வேகத்தை உணர்ந்து கதவுகள் தானாக மூடிக் கொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, கட்டுமானம் மற்றும் உறுதிமிக்க பாகங்களுடன் ரெனோ கேப்ச்சர் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைக்கு ஒப்பானதாக களமிறக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் ஏற்கனவே ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆட்டோ ஹெட்லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், ரூஃப் ரெயில்கள், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், 17 அங்குல க்ரிஸ்ட்டல் கட் அலாய் வீல்கள் உள்ளன.

ரெனோ கேப்ச்சர் பிளாட்டீன் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஃப்ளோட்டிங் இண்டிகேட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை உள்ளன. இந்த வேரியண்ட் 6 விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டானது மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாகக 106 பிஎஸ் பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.87 கிமீ மைலேஜ் தரும்.

இந்த காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 20.37 கிமீ மைலேஜை வழங்கும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் விலை விபரங்களை கீழே காணலாம்.
ஆர்எக்ஸ்இ பெட்ரோல்: ரூ.9.50 லட்சம்
பிளாட்டீன் பெட்ரோல்: ரூ.11.99 லட்சம்
ஆர்எக்ஸ்இ டீசல்: ரூ.10.49 லட்சம்
பிளாட்டீன் டீசல்: ரூ.12.99 லட்சம்


Click it and Unblock the Notifications








