இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

இந்தியாவில் டீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ கார் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், க்விட் மற்றும் ட்ரைபர் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

மேலும், டஸ்ட்டர், கேப்ச்சர் மற்றும் லாட்ஜி கார்கள் பெட்ரோல் மட்டுமின்றி, டீசல் மாடல்களிலும் கிடைக்கின்றன. இந்த கார்களில் பயன்படுத்தப்படும், 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் போன்றே இந்தியர்கள் மத்தியில் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர விதிகளுக்கு நிகரான பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த நிலையில், தனது 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் நோக்கம் ரெனோ கார் நிறுவனத்திடம் இல்லை.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

அண்மையில் நடந்த ட்ரைபர் கார் அறிமுக விழாவில் ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மம்மில்லபில்லே இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

இதுகுறித்து வெங்கட்ராம் கூறுகையில்,"புதிய மாசு உமிழவு விதிகளுக்கு நிகராக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் செலவாகும். மேலும், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலை ரூ.3 லட்சம் வரை கூடுதலாக இருக்கும். எனவே, நிச்சயமாக வாடிக்கையாளர்களின் ஆதரவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

எனவே, ரெனோ நிறுவனம் தற்போது பயன்படுத்தும் பெட்ரோல் எஞ்சின்கள் தவிர்த்து, புதிய டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்களையும் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் இந்த புதிய எஞ்சின்கள் பொருத்தப்பட்ட கார்களை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே சிறிய வகை டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் டீசல் கார்களுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் டீசல்களை கார்களை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2019, 14:04 [IST]
English summary
French car maker, Renault is planning to phase out diesel cars in India.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+