ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ க்விட் காரின் அடிப்படையில் புதிய எம்பிவி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எம்பிவி கார் தற்போது சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த புதிய ரெனோ எம்பிவி கார் RBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் ஸ்பை படங்கள் ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியாகி இருக்கின்றன.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே, இந்த புதிய எம்பிவி காரும் 4 மீட்டர் நீளத்திற்குள் கொண்ட மினி எம்பிவி கார் மாடலாக இருக்கும். எனினும், டட்சன் கோ ப்ளஸ் காரைவிட தரமான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

க்விட் காரின் அடிப்படையிலான இந்த புதிய காரின் முன்புறத்தில் பெரிய க்ரில் அமைப்பு, கச்சிதமான வடிவிலான ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இருப்பதை தெரிகிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் ஸ்டீயரிங் வீல் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் ரூ.5 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. டட்சன் கோ ப்ளஸ் காருக்கு போட்டியான ரகத்தில் வர இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட்
English summary
Renault is all set to introduce its Kwid-based MPV in the Indian market. The new MPV (codenamed 'Renault RBC') will slot below the Lodgy in the company's product lineup.
Story first published: Friday, January 11, 2019, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X