மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து ரெனால்ட் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் ஹேப்பி
ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றால், இந்திய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஒரு வார கால சம்மர் சர்வீஸ் கேம்ப்பை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த கோடை கால சர்வீஸ் கேம்ப் நேற்று முதல் (ஏப்ரல் 22) தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு, இந்த சிறப்பு சர்வீஸ் கேம்ப் நடைபெறவுள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், ஆஃபர்கள் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து ரெனால்ட் டீலர்ஷிப்களிலும் இந்த சிறப்பு சம்மர் சர்வீஸ் கேம்ப் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க உள்ள 450 டச் பாயிண்ட்களும் இதில் அடங்கும். இந்த கோடை கால சர்வீஸ் கேம்ப்பில், அனைத்து வாடிக்கையாளர்களின் கார்களும் விரிவான செக் அப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி பல்வேறு தள்ளுபடிகள், சிறப்பு ஆஃபர்கள் மற்றும் இதர பலன்களை ரெனால்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இதன்படி இன்ஜின் ஆயில்களுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர குறிப்பிட்ட பார்ட்ஸ்களுக்கு 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மேலும் லேபர் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கு ரெனால்ட் நிறுவனம் 15 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இதுதவிர குறிப்பிட்ட ஆக்ஸஸெரிஸ்களுக்கு 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மேலும் 'மை ரெனால்ட் ஆப்' (My Renault App) உறுப்பினர்களுக்கு, கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன் ரோடு சைடு அஸிஸ்டன்சுக்கு (Road-side Assistance), 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இந்த சம்மர் சர்வீஸ் கேம்ப்பில் உறுதி செய்யப்பட்ட பரிசு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இந்திய மார்க்கெட்டில் இந்த மாதத்தில், சர்வீஸ் கேம்ப்பை நடத்தும் சமீபத்திய நிறுவனம் ரெனால்ட் ஆகும். ஏனெனில் நிஸான், ஹூண்டாய், மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்ற சிறப்பு சர்வீஸ் கேம்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்த சம்மர் சர்வீஸ் கேம்ப் தவிர, ட்ரைபர் எம்பிவி (Triber MPV) ரக காரை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

புத்தம் புதிய ட்ரைபர் எம்பிவி கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாயின. ட்ரைபர் கார் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் வரும் காலங்களில் இந்திய மார்க்கெட்டிற்கு என பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதன்படி நான்கு புதிய மாடல்களை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், ஒன்று ட்ரைபர். இதுதவிர மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த கார் தற்போது எச்பிசி (HBC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் க்விட் மற்றும் டஸ்டர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








