சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா?

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த ட்ரைபர் மினி எம்பிவி ரக கார், விற்பனையில் அதன் சொந்த நிறுவன தயாரிப்புகளையே பின்னுக்கு தள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமோகமான வரவேற்பிற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

பிரெஞ்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம், இந்திய எம்பிவி ரக கார் விரும்பிகளை கவரும் வகையில் அண்மையில் ட்ரைபர் காரை அறிமுகம் செய்தது.

புதிய ட்ரைபர் கார், 4 மீட்டர் நீளமுடைய 7 இருக்கைக் கொண்ட மினி எம்பிவி ரகமாகும். இந்த ட்ரைபர், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், விற்பனையில் முன்னணி வகுக்கும் ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான க்விட் ஹேட்ச்பேக் ரக காரை, அது பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆகையால், தற்போது ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ட்ரைபர் மாடல் முன்னிலை வகிக்கின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

ட்ரைபர் மாடலின் இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், அதன் மலிவு விலை மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளே தற்போது அதீத வரவேற்பிற்கான முக்கிய காரணியாக உள்ளது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

ரெனால்ட் நிறுவனம், அதன் க்விட் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 2.83 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

அதேபோன்று, டாப் எண்ட் மாடலாக இருக்கும் க்ளிம்பர் 1.0 லிட்டர் மாடலுக்கு விலையாக ரூ. 4.84 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பிரிமியம் தரத்திலான அம்சங்கள் வழங்கப்பட்டிருப்பதன் காரணத்தால் இந்த விலையை ரெனால்ட் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

அதேசமயம், ரெனோ ட்ரைபர் காரின் விலையைப் பார்த்தோமேயானால், அவற்றின் விலையும் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் உள்ளது. அந்தவகையில், ட்ரைபரின் ஆரம்பநிலை வேரியண்டிற்கு ரூ. 4.95 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று, இதன் டாப் எண்ட் மாடலுக்கு ரூ. 6.49 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

7 இருக்கைகளைக் கொண்ட கார், இந்த விலையில் கிடைப்பது மிகப் பெரிய போட்டியைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தரத்திலான கார்கள் அதிக விலையைக் கொண்டதாக இந்தியாவில் விற்பனையாகி வருகின்றது. ஆகையால், எட்டாக் கனியாக இருந்துவந்த எம்பிவி ரக கார் பிரியர்களுக்கு மத்தியில் இது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

விலை மட்டுமின்றி மற்ற அம்சங்களிலும் முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் உள்ளது. இதன்காரணமாகவே, விற்பனையில் நல்ல வளர்ச்சியை ட்ரைபர் சந்தித்து வருகின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், முக்கிய அம்சமாக இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காணப்படுகின்றது. இதில் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்டவைக் காணப்படுகின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

இத்துடன், ட்ரைபர் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கையில் அமரும் பயணிகளுக்கென தனி ஏசி வெண்ட்டுகள் உள்ளிட்ட அம்சங்களும் காணப்படுகின்றது.

அதேபோன்று, பாதுகாப்பு அம்சத்திற்கான அம்சங்களும் இதில் ஏராளாமாக காணப்படுகின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், ரெனால்ட் ட்ரைபரின் டாப் எண்ட் வேரியண்டில் 4 ஏர்பேக்குகளும், இதர வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா (ஆப்ஷனல்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

இந்த அளிவிற்கு சிறப்பான விஷயங்களை வாரி வழங்கும் ட்ரைபர் காரில் ஒன்று மட்டும் பெரிய குறையாக உள்ளது. அந்தவகையில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைப்பது மட்டுமே குறையாக பார்க்கப்படுகின்றது.

சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா..?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2019, 14:02 [IST]
English summary
Renault Triber Beats Kwid Becomes Best Selling Renault Car In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+