டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் களம் இறக்கவுள்ள புதிய கார் ஒன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்ரைபர்தான் அந்த கார். 7 சீட்டர் காரான ரெனால்ட் ட்ரைபர், மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

போதுமான இடவசதி மற்றும் அட்டகாசமான டிசைனுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. அத்துடன் ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை ட்ரைபர் தூண்டியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

இதன்படி ரெனால்ட் ட்ரைபர் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இந்த வரிசையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் அறிமுகம் மற்றும் டெலிவரி தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

அனேகமாக ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாத இறுதியில், ரெனால்ட் ட்ரைபர் காரின் டெலிவரி தொடங்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால் இந்த தகவலை ரெனால்ட் இந்தியா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வ தேதியை ரெனால்ட் இந்தியா நிறுவனம் அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் அதே ஆகஸ்ட் 22ம் தேதிதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு காரான கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

செல்டோஸ் எஸ்யூவிதான் இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் கார். சரி, மீண்டும் ரெனால்ட் ட்ரைபருக்கு வருவோம். ரெனால்ட் ட்ரைபர் காருக்கான முன்பதிவு அனேகமாக அடுத்த வாரம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. மாருதி சுஸுகி ஸ்விப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் ட்ரைபர் போட்டியிடும்.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

நான்கு ஏர் பேக்குகள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வரிசைகளிலும் ஏசி வெண்ட் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரில், 1.0 லிட்டர் 'எனர்ஜி' பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

டபுள் டமாக்கா! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்?

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் Easy-R ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட் 7 லட்ச ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 14, 2019, 17:27 [IST]
English summary
Renault Triber India Launch Date Leaked. Read in Tamil
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+