நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரெனோ ட்ரைபர் காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

மிக குறைவான பட்ஜெட்டில் புதிய 7 சீட்டர் மாடலை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ட்ரைபர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புத்தம் புதிய மினி எம்பிவி கார் மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

அப்போதிலிருந்தே பட்ஜெட் கார் வாங்க திட்டம் போட்டிருப்பவர்களின் கவனத்தை இந்ந கார் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சரியான தேர்வாக புதிய ரெனோ ட்ரைபர் கார் களமிறக்கப்பட இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

வரும் 17ந் தேதி முதல் இந்த புதிய ரெனோ ட்ரைபர் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், வரும் 28ந் தேதி இந்த புதிய ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ரெனோ ட்ரைபர் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 1,739 மிமீ அகலமும், 1,643 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,636 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, விலை அடிப்படையில் இதன் ரகத்தில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் கார்களைவிட பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடைசி வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமரும் வசதி கொண்டதாக இருக்கும். மூன்றாவது வரிசை இருக்கையை நீக்கினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ஸ்பேஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

டிசைனில் மிகச் சிறப்பாகவே இருக்கிறது ரெனோ ட்ரைபர் கார். இந்த காரின் உட்புறத்தில் டியூவல் டோன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும், நேவிகேஷன் வசதியையும் சப்போர்ட் செய்யும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. டாப் வேரியண்ட்டில் சைடு ஏர்பேக்குகளும் இடம்பெற இருப்பதால் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 எச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளஇப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகமாக இருக்கிறது. டர்போ பெட்ரோல் எஞ்சின் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ரெனோ ட்ரைபர் கார் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த அம்சங்களுடன் மிகச் சிறந்த மினி எம்பிவி கார் மாடலாக வர இருக்கிறது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ரெனோ ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஈக்கோ, டட்சன் கோ ப்ளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2019, 16:49 [IST]
English summary
Renault India has confirmed that its new Triber will launch in India on August 28, with bookings scheduled to commence on August 17, 2019.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+