ரெனோ நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரெனோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் எம்பிவி ரக காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரெனோ கார் நிறுவனம் இந்தியாவிற்காக புத்தம் புதிய எம்பிவி ரக காரை உருவாக்கி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய எம்பிவி கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுகுறித்த ஸ்பை படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

இந்த நிலையில், இந்த புதிய எம்பிவி காரை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை ரெனோ நிறுவனம் துவங்கி இருக்கிறது. அதன்படி, புதிய எம்பிவி காருக்கான பெயரை இன்று வெளியிட்டு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் ( Renault Triber) என்ற பெயரில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. Tribe (பழங்குடி) என்ற வார்த்தையை அடிப்படையாக வைத்து இந்த பெயரை சூட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காருக்கான பிரத்யேக இணையப் பக்கத்தையும் ரெனோ நிறுவனம் துவங்கி இருக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரெனோ - நிஸான் கூட்டு நிறுவனத்தின் சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரெனோ லாட்ஜி எம்பிவி காரைவிட குறைவான விலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரெனோ க்விட் காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரிலும் இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. மேலும், எல்இடி பகல்நேர விளக்குகள், கச்சிதமான ஹெட்லைட்டுகள் முகப்பை வசீகரமாக காட்டும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

இது காம்பேக்ட் ரக எம்பிவியாக இருந்தாலும், 7 பேர் செல்வதற்கான இடவசதியை அளிக்கும். கடைசி வரிசை இருக்கையில் சிறியவர்கள் செல்லக்கூடியதாக இருக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கும் வசதியும் இருக்கும் என்பதால், பொருட்கள் வைப்பதற்கா இடவசதியை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

டட்சன் கோ ப்ளஸ் கார் போன்று, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வரும் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால், டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம்.

ரெனோ நிறுவனத்தின் புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சத்திற்கு இடையிலான ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படலாம். இது விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி காராக நிலைநிறுத்தப்படும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை தூண்டி இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட்
English summary
Renault India has revealed name of their new RBC MPV today. It will be called as Renaul Triber.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X