இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக மலிவான எம்பிவி வகை கார்களில் ஒன்றாக இது திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார், ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இதன் அதிகாரப்பூர்வ பெயரை ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. இதன்படி ட்ரைபர் (Renault Triber) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சப் 4 மீட்டர் எம்பிவியான ரெனால்ட் ட்ரைபர், வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த நீளம் 4 மீட்டருக்குள்தான் இருக்கும் என்பதால், போட்டி நிறுவனங்களுக்கு சவாலான வகையில் விலை நிர்ணயம் செய்ய முடியும்.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

விசாலமான இட வசதி மற்றும் அல்ட்ரா மாடர்ன் ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ட்ரைபர் எம்பிவி காரை ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன்படி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கை அமைப்புடன் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி வரிசை இருக்கைகளை தேவைப்பட்டால் எளிதாக அகற்றி கொள்ளும் வகையிலான புதிய வசதி வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

இதன் மூலம் காரின் பூட் ஸ்பேஸை (Boot Space) அதிகரித்து கொள்ள முடியும். இந்த செக்மெண்ட்டில் முதல் முறையாக ரெனால்ட் ட்ரைபர் காரில்தான் இவ்வாறான ஒரு வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார் அண்டு பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரானது இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமான முறையில் உருவாக்கப்படுகிறது.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

என்றாலும் பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் இது விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆனால் என்ட்ரி-லெவல் வெர்ஷனில், குறைவான வசதிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு ஏற்ப இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

ஆனால் டாப் வேரியண்ட்களில், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன் ரூஃப் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இதனால் இதன் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் மிக பிரபலமான மாடல்களில் ஒன்றான க்விட் (Renault Kwid) காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ட்ரைபர் எம்பிவியும் உருவாக்கப்படுகிறது.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

இதன் அடிப்படையில் இரண்டு கார்களும் சில பாகங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளன. ஆனால் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரான க்விட்டை காட்டிலும், ட்ரைபர் எம்பிவி கார் மாடர்ன் ஆன தோற்றத்தில் இருக்க வேண்டும் என ரெனால்ட் நிறுவனம் விரும்புகிறது. எனவே ரெனால்ட் க்விட்டை விட மேம்பட்ட டிசைனை ட்ரைபர் எம்பிவி காரில் எதிர்பார்க்கலாம்.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

புதிய ரெனால்ட் ட்ரைபர் காரில், எல்இடி டிஆர்எல்கள் உடனான ஹெட்லேம்ப்ஸ், 'வி' வடிவ முகப்பு க்ரில் ஆகியவை வழங்கப்படவுள்ளன. க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனான 1.0 லிட்டர், SCe 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் ரெனால்ட் ட்ரைபர் காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதலாக 7 பிஎஸ் பவரையும் உருவாக்கும் திறன் வாய்ந்தது. இதே இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷனை ட்ரைபர் எம்பிவி பின் நாட்களில் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்

புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரின் விலை 5.5 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகதான் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனால்ட் ட்ரைபர் பெரும் ஆவலை தூண்டியுள்ளது. இவ்வாறான குறைவான விலை நிர்ணயம் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரின் சில வேரியண்ட்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

Note: Kwid Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2019, 9:17 [IST]
English summary
Removable Third Row Seat: Renault Triber MPV's Segment-First Feature. Read in Tamil
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+