புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

புதிய ரெனால்ட் காரின் விலை விபரங்கள் தற்போது வெளியே கசிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் க்விட், டஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் க்விட் மற்றும் டஸ்டர் ஆகியவை மட்டுமே இந்திய மார்க்கெட்டில் நன்கு பிரபலமான ரெனால்ட் நிறுவன கார் மாடல்களாக உள்ளன. எனவே ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

இதன்படி ட்ரைபர் (Renault Triber) என்ற காரை ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது காம்பேக்ட் எம்பிவி ரக கார் ஆகும். மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட 7 சீட்டர் மாடலாக ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை பெரிதும் தூண்டியுள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

மாடர்ன் ஆன தோற்றத்தில் நன்கு விசாலமான இட வசதி கொண்ட அதே சமயம் மிக குறைவான விலையில் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என இருக்கும் இளைய தலைமுறையை குறி வைத்துதான் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை களத்தில் இறக்குகிறது. மிக மலிவான விலை, போதுமான இடவசதி ஆகிய காரணங்களால்தான் ட்ரைபர் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது எம்பிவி ரக கார்தான் ட்ரைபர். முன்னதாக லாட்ஜி (Renault Lodgy) என்ற எம்பிவி ரக காரை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் ரெனால்ட் லாட்ஜி கார் இந்திய மார்க்கெட்டில் பெரிதாக சொல்லி கொள்ளும்படி சோபிக்கவில்லை.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

ஆனால் ரெனால்ட் ட்ரைபர் அவ்வாறு விற்பனையில் தடுமாறாது என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு செய்யவுள்ள மிகப்பெரிய லான்ச் ட்ரைபர்தான். ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை கடந்த ஜூன் 19ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ட்ரைபர் காரை ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

அனேகமாக ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரெனால்ட் ட்ரைபர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யும் தினத்தில் இருந்தே ட்ரைபர் காரின் டெலிவரியையும் ரெனால்ட் நிறுவனம் தொடங்கவுள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

முன்னதாக ரெனால்ட் நிறுவனம் லாட்ஜி காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது. வரும் 2020ம் ஆண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, லாட்ஜி காரை ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் லாட்ஜி போல் அல்லாது, ரெனால்ட் ட்ரைபர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கொண்ட கார் ஆகும்.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

ரெனால்ட் ட்ரைபர் காரில், 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. ரெனால்ட் க்விட் காரில் இருக்கும் அதே இன்ஜின்தான் இது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்படும். 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி என இந்த இன்ஜின் உடன் இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

க்விட் காரின் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ட்ரைபர் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, க்விட் கார் மிகவும் பிரபலமாக உள்ள வளர்ந்து வரும் மார்க்கெட்களுக்கும் ட்ரைபர் காரை ஏற்றுமதி செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் டைமன்சன்கள் சமீபத்தில்தான் வெளியாயின.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

இதன் நீளம் 3,990 மிமீ. அகலம் 1,739 மிமீ. உயரம் 1,643 மிமீ. வீல் பேஸ் 2,636 மிமீ. ரெனால்ட் ட்ரைபர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 182 மிமீ. இந்திய சூழ்நிலைக்கு இது போதுமானதுதான். இந்த காரின் எடை 947 கிலோ கிராம். ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட வசதிகளும் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படவுள்ளன.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

இந்த சூழலில் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு முன்பாக அதன் விலை விபரங்கள் கசிந்துள்ளன. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 4.4 லட்ச ரூபாய்தான் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என கார்டாக் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 5.8 லட்ச ரூபாய் மட்டுமே என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு

அதே சமயத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரில், 2 இருக்கைகளை மூன்றாவது வரிசையாக இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இதுபோன்ற வசதி இந்தியாவில் வேறு எந்த எம்பிவி காரிலும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருக்கைகள் ஒவ்வொன்றையும் தலா ரூ.3 ஆயிரம் என்ற விலையில் வாங்கி கொள்ள முடியும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் மலிவான விலை என்பதால், ரெனால்ட் ட்ரைபர் மீதான எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2019, 16:51 [IST]
English summary
Renault Triber Prices Leaked Ahead Of Launch. Read in Tamil
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+