லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

ரெனோ நிறுவனத்தின் மலிவு விலையில் களமிறங்கும் 7 இருக்கைக் கொண்ட ட்ரைபர் கார், லாஞ்சிற்கு முன்னதாகவே மக்கள் பார்வைக்காக பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

பிரெஞ்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ரெனோ நிறுவனம், அதன் பட்ஜெட் விலையிலான எம்பிவி ரக ட்ரைபர் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது வருகின்ற 28ம் தேதி களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால், இதற்கு முன்னதாகவே கடந்த 17ம் தேதியில் இருந்து ரெனோ ட்ரைபர் காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டு விட்டது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இதற்கு முன்தொகையாக ரூ. 11 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை, ஆன்லைன் அல்லது நேரடியாக டீலர்களை அணுகி புக் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், ரெனோ நிறுவனம், இந்த மலிவு விலையிலான ட்ரைபர் காரை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தும் விதமான முயற்சியில் களமிறங்கியுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இதனடிப்படையில், ட்ரைபரின் லாஞ்சிற்கு முன்னரே மக்கள் மத்தியில் பார்வை படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக, பொதுமக்கள் அதிகம் குழுமும் இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் இந்த கார் காட்சியளிக்க தொடங்கியுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இதுகுறித்த புகைப்படத்தை குன்வர் ரமேஷ் சைகல் என்ற இளைஞர், அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படம் அம்மாநிலத்தில் உள்ள ஓர் பிரபல மாலில் எடுக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

லாஞ்சிற்கு பின்னர், இந்த ட்ரைபர் காரை டஸ்டர் மற்றும் க்விட் கார்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட ரெனோ தெரிவித்துள்ளது. தற்போது இந்த கார்கள் மிகப் பெரிய அளவிலான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இதனை சீர் செய்யும் விதமாக, ரெனோ நிறுவனம், ட்ரைபர் மாடலை இவற்றின் வரிசையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

அதேசமயம், ரெனோ நிறுவனம், ட்ரைபர் எம்பிவி ரக காரில் பல்வேறு புது விதமான அம்சங்களைச் சேர்த்து, சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆகையால், இந்த கார் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், மதிப்பெண்ணையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

7 இருக்கை அமைப்பைக் கொண்ட இக்கார் சப்-4 மீட்டர் அளவில் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் விற்பனையாகும் எந்தவொரு காரும் இந்த தரத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆகையால், இந்த கார் சுற்றுலா மற்றும் அதிகம் பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான மாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இந்த காரில் அனைவருக்கும் குளிர்ச்சியான காற்றை வழங்கும்வகையில், இரண்டு மற்றும் மூன்றாம் வரிசை இருக்கையில் அமர்பவர்களுக்கான பிரத்யேக ஏசி வெண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகையால், ட்ரைபர் காரில் பயணம் மேற்கொள்ளுபவர்கள் அனைவருக்கும் சொகுசான பயணம் அமைவது உறுதி.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

மேலும், மிக முக்கிய அம்சமாக இந்த காரில் 8 இன்சிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் எல்இடி இன்டிகேட்டரைப் பெற்றிருக்கின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

ரெனோ ட்ரைபர் காரின் இருக்கை, பயணிகளுக்கு மிகவும் சொகுசான உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 5 இருக்கை அமைப்புடைய காரில் எந்த அளவிற்கு இடவசதி இருக்குமோ, அதே அளவிலான பூட் ஸ்பேஸ் இந்த காரில் இடம்பெறும் என கூறப்படுகின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இத்துடன், பிரத்யேக வசதியாக சிறிய அளவிலான ஃபிரிட்ஜ், தண்ணீர் பாட்டில் மற்றும் பானங்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இதைத்தொடர்ந்து, ட்ரைபரின் சிறப்பான எஞ்ஜின் திறனுக்காக 3 சிலிண்டர் 1 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனில் கிடைக்கின்றது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள பிஎஸ் மாசு உமிழ்வு விதியின் காரணமாக, ட்ரைபரில் டீசல் ஆப்ஷன் இடம்பெறவில்லை. டீசல் எஞ்ஜினை புதிய பிஎஸ்-6 தரத்திற்கேற்ப உருவாக்கினால், அதன் விலை மிக அதிகமானதாக மாறும். இதனைத் தவிர்க்கவே ட்ரைபர் காரில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டும் இடம்பெற உள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்!

ரெனோவின் இந்த புத்தம் புதிய ட்ரைபர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், அப்கமிங் மாடலாக இருக்கும் கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும். அதற்கேற்ப வகையில், அதன் விலையும் மலிவானதாக அமைய உள்ளது. அந்தவகையில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Courtesy: PMG AUTOS/Facebook

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2019, 13:43 [IST]
English summary
Renault Triber Public Debut mall Before Launch. Read In Tamil.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+