ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

ரெனோ ட்ரைபர் காரில் வாடிக்கையாளர்கள் குறையாக கருதும் விஷயத்திற்கு விரைவில் தீர்வு ஏற்பட உள்ளது. இதனால், எம்பிவி கார் மார்க்கெட்டில் ரெனோ ட்ரைபர் முக்கிய மாடலாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் மினி எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 6,000 யூனிட்டுகள் விற்பனை என்ற அளவை தொட்டு போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இருந்தாலும், போதுமான இடவசதி, அதிக சிறப்பம்சங்கள், கவரும் டிசைன் ஆகியவற்றுடன் ரூ.4.95 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்தததால், வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 72 எச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும் இந்த காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் விரைவில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த காரில் அனைத்தும் நிறைவை தரும் விதத்தில் இருந்தாலும், இந்த 7 சீட்டர் காருக்கு 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போதுமான திறன் கொண்டதாக இல்லை என்ற கருத்து வாடிக்கையாளர் மத்தியில் இருக்கிறது. புதிதாக கார் வாங்குவோருக்கும் இந்த குறையால் பிற மாடல்களை தேர்வு செய்ய முடிவு செய்கின்றனர்.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த நிலையில், தற்போது ரெனோ ட்ரைபர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனை தக்க வைக்கவும், கூடுதல் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் திறன் வாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகப்படுத்த ரெனோ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

அதாவது, வெளிநாடுகளில் ரெனோ நிறுவனத்தின் கார் மாடல்களில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த எஞ்சின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் தேர்வை ட்ரைபர் காரில் வழங்குவதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் தேர்வு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டாலும், தற்போது வழங்கப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலமாக, அதிக திறன் கொண்ட ட்ரைபர் மாடலை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும்.

புதிய டர்போ எஞ்சின் 95 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி

இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது விரைவில் எதிர்பார்க்கப்படும் ரெனோ எச்பிசி காம்பேக்ட் எஸ்யூவி மாடலிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய எஞ்சின் ரெனோ நிறுவனத்தின் விற்பனையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: AutoCarIndia

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2019, 16:44 [IST]
English summary
According to media report, Renault is planning to introduce new turbo petrol engine option in Triber MPV car in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+