பெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்!
ரெனோ ட்ரைபர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் வகையில் ட்ரைபர் காரில் சில புதிய அம்சங்களை சேர்த்துள்ளது ரெனோ கார் நிறுவனம். அதன் விபரங்களை பார்க்கலாம்.

ரெனோ ட்ரைபர் காரின் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல் சக்கரங்கள்தான் வழங்கப்பட்டன. இது டாப் வேரியண்ட்டை வாங்குவோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் குறையை போக்கும் விதத்தில், 15 அங்குல ஸ்டீல் சக்கரங்களும், மீட்டியர் டயர்களும் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய 15 அங்குல சக்கரம் அலாய் சக்கரங்கள் போன்று டிசைனஅ செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த சக்கரங்களுக்கு தக்கவாறு 185/65 செக்ஷன் டயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த பெரிய சக்கரங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மனதுக்கு நிறைவை தரும் என்று நம்பலாம்.

ஏற்கனவே ரூ.6.53 லட்சத்தில் கிடைத்து வரும் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டின் விலை தற்போது ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து இந்த வேரியண்ட்டில் வேறு எந்த மாற்றங்களும் கொடுக்கப்படவில்லை.

புதிய ரெனோ க்விட் காரில் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லட்டுகள்,எல்இடி பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கின்றன.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 70 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் கார் 7 சீட்டர் மாடல் என்பதே மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு இணையாக டட்சன் கோ ப்ளஸ் காரை கூறலாம். ஆனால், இது ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை குறிவைத்தே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இந்த காருக்கான வரவேற்பு வரும் மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த 7 சீட்டர் மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








