பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

வாகனங்களுக்கு இமாலய வரி விதிப்பு முறையை பாஜக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதிய வரி எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இந்தியாவில் வாகன பெருக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. வீட்டிற்கு ஒரு வாகனம் என்று இருந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வாகனம் என்ற சூழல் உருவாகி விட்டது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடுகிறது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த மக்கள் முன்வந்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

ஆனால் சொந்த வாகனம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், பொது போக்குவரத்து முறைகளுக்கு மாற தயாராக இல்லை. வாகன பெருக்கம் காரணமாக இந்தியா எதிர்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான பிரச்னை சுற்றுச்சூழல் மாசுபாடு.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் இந்தியாவின் தற்போதைய காற்று மாசுபாடு பிரச்னைக்கு தலையாய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவே வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இந்த நிலையில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் வாகனங்களுக்கு அதிரடியான புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இதன்படி ஒருவர் இரண்டாவது கார் வாங்கினால், அதிக சாலை வரி கட்ட வேண்டியதிருக்கும். அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய கார்களுக்கு 6 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒருவர் இரண்டாவது கார் வாங்கினால், 3 சதவீத கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இதுதவிர 15 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட கார்களுக்கு ஜார்கண்ட் அரசு தற்போது கூடுதலாக 3 சதவீத வரியை விதிக்க தொடங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் ஒருவரின் இரண்டாவது கார் 15 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருந்தால், மொத்தம் 12 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

ஜார்கண்ட் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய வரி விதிப்பு முறைகள், கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆனால் ஒருவரின் பெயரிலேயே இரண்டாவது கார் வாங்கும்போதுதான், கூடுதல் வரிகளை செலுத்த வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட பெட்ரோல், டீசல் வாகனங்களின் சகாப்தத்திற்கு முடிவு கட்டவே விரும்புகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இதன்மூலம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் பெருந்தொகை மிச்சம் பிடிக்கப்படும்.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இதுதவிர இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையை ஏறக்குறைய சரி சமமாக கொண்டு வர மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பசுமை வரி எனும் புதிய வரியை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும்.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மெல்ல மெல்ல மாறுவார்கள் என மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிப்பு என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...

வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NOTE: Images Are Representative Purpose Only

Most Read Articles
English summary
Road Tax Increased For Second Car In Jharkhand. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X